DIN
திட்டங்கள் நிறைவேறும். சுறுசுறுப்புடன் திறமையுடன் பணியாற்றி, வெற்றி பெறுவீர்கள். நிதிநிலைமை சாதகமாகும். போட்டிகள் இருக்காது.
உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் பொறுப்புடன் நடப்பீர்கள். விவசாயிகள் மாற்றுப்பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி உண்டாகும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் மங்களகரமான செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பெற்றோரின் ஆதரவு சிறப்பாகத் தொடரும். தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு தேடி வரும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும்.
அரசியல்வாதிகளின் லட்சியம் பூர்த்தியாகும். கலைத் துறையினர் பிறரை அனுசரித்து நடப்பீர்கள். பெண்களுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவர்கள் கேளிக்கைகளில் நேரத்தைக் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பழைய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்குவீர்கள். தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பயணங்களை மேற்கொள்வீர்கள். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் பாராமுகமாகவே நடப்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் புதிய வேகத்துடன் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினரின் பணி சிறக்கும். பெண்கள் சேமிப்பு விஷயங்களில் அதிக அக்கறையைக் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மற்றவர்கள் பாராட்டும்படி நடப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.
உத்தியோகஸ்தர்கள் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயம் லாபமாகவே இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் திட்டமிட்டபடி செயலாற்றுவீர்கள். கலைத் துறையினர் புதிய நுட்பங்களை அறிவீர்கள். பெண்கள் மனநிறைவோடு செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலைகள் சாதகமாக அமையும். மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். மரியாதை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயி
களுக்கு விளைச்சல் சற்று குறையும். அரசியல்
வாதிகள் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் அளவுக்கு மீறி ஆசைப்பட வேண்டாம். மாணவர்கள் பெற்றோரின்அறிவுரைகளைக் கேட்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தினரிடையே இணக்கமான சூழல் உண்டாகும். பிறரிடம் இன்முகத்தோடு பழகுவீர்கள். உதவி செய்தவர்களுக்கு நன்றி காட்டுவீர்கள். பணம் நேரத்துக்கு வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்குப் படிப்படியாக வேலைச்சுமை குறையும். வியாபாரிகளுக்கு வரவு செலவுகளில் குறைகள் உண்டாகும். விவசாயிகள் வருமானத்தைக் கூட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மேலிட ஆதரவு குறையும்.
கலைத் துறையினருக்கு மரியாதை அதிகரிக்கும். பெண்கள் ஆன்மிகப் பலம் பெற கோயில்களுக்குச் செல்வீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். திட்டங்களைச் சிந்தித்துச் செயல்படுத்துவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமாக இருப்பீர்கள். வியாபாரிகள் புதிய நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்களைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் பயிர்களுக்கு உரங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிரிகளின் ரகசியங்களை அறிவீர்கள். கலைத் துறையினருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். பெண்கள் கணவரிடம் அன்னியோன்யம் கூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உடனிருப்போருடன் நல்ல புரிதல் உண்டாகும். தற்போதைய சூழ்நிலைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய உத்வேகத்துடன் செயல்படுத்துவீர்கள். சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத் துறையினருக்குப் பணவரவில் தாமதம் ஏற்படும். பெண்கள் உடல்நலக் குறைவு ஏற்படலாம். மாணவர்கள் பிறரிடம் கவனமாகப் பழகவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
நண்பர்களால் சிறுகுழப்பங்கள் உண்டாகும். செயல்களில் கவனமாக ஈடுபடுவீர்கள். உங்களுக்கு கீழ்பணிபுரிவோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். சமூகத்தில் நற்பெயரை எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பளிச்சிடும். வியாபாரிகள் கடன் வாங்க வேண்டாம். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கச் செலவு செய்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கலைத் துறையினருக்குப் புகழ் உண்டாகும். பெண்களின் உடல் ஆரோக்கியம் சிறக்கும். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 30, 31, செப்டம்பர் 1.
தேக ஆரோக்கியம் சிறக்கும். அறிவாற்றல் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். பங்காளிகளின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளாலும் லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகளும், கடமைகளும் அதிகரிக்கும். கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 2, 3.
வேலைகளைத் திட்டமிட்டு செய்வீர்கள். தன்னலம் கருதாது செயல்படுவீர்கள். குடும்பத்திலும் அமைதி நிறையும். மனதுக்கினிய பயணங்களைச் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சிறிது பிரச்னைகள் ஏற்படும். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆலோசனைகளைக் கேட்பீர்கள். விவசாயிகள் சந்தையில் போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் ஆதரவு உற்சாகம் அளிக்கும். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 4, 5.
தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றி பெறுவீர்கள். கடன்கள் வசூலாகும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைத் திட்டமிட்டு செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சாதகமாகவே இருக்கும். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனை புரிவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.