ஜூலை மாதப் பலன்கள்: 12 ராசிக்கும்!

DIN

மேஷம்

நீங்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவர். இந்த மாதம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும.

தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும்.

உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

கலைத்துறையினர் சினிமா நாடகம் சின்னத்திரை ஆடல் பாடல் போன்றவற்றில் ஈடுபாடுபவர்கள் பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவார்கள்.

அஸ்வினி: குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும்.

பரணி: தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும்.

கார்த்திகை: பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

ரிஷபம்

நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உதவிகள் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.

வியாபாரிகள் பொருள்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.

பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம்.

கார்த்திகை: திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள்.

ரோகினி: குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

மிருகசீரிஷம்: எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும்.

மிதுனம்

செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பொறாமைப்படுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.

பெண்கள் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் புத்திரதோஷத்துக்கு உரிய முறையில் பரிகாரம் செய்வது சிறந்தது.

மிருகசீரிஷம்: எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.

திருவாதிரை: பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

புனர்பூசம்: தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: முடிந்தவரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

கடகம்

குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலமான செயல்கள் உங்களுக்கு தேவையான சமயத்தில் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அரசுத்துறைகளில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சிலரது குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாவார்கள்.

தொழில்திபர்கள் தங்கள் தொழிலில் வெற்றியும் புகழும் பெறுவார்கள். பணிபுரியும் பெண்கள் சிறிது மந்த நிலை காண்பார்கள்.

புனர்பூசம்: எதிர்ப்புகள் அகலும். தெளிவான மனநிலை இருக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள்.

பூசம்: எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும்.

ஆயில்யம்: குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

பரிகாரம்: திங்கள்கிழமைதோறும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று எழுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும்.

சிம்மம்

உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களி்ன் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்பப்படும்.

உத்தியோகஸ்தர்கள் அரசுத்துறை, தனியார் துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பணியின் பொருட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வர நேரலாம்.

வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அனுகூல செயலபாட்டை தேவையான நேரத்தில் தடையின்றி பெறுவார்கள்.

மகம்: எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும்.

பூரம்: குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.

உத்திரம்: தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

கன்னி

கடந்த காலங்களில் இருந்த வீண் செலவுகள் குறைந்து சுபகாரிய செலவுகள் நிகழும். உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும்.

உத்திகோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கு பல்வேறு விரயமான செலவுகள் வரலாம்.

வியாபாரிகள் காகிதப்பொருட்கள் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

உத்திரம்: உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

ஹஸ்தம்: குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

சித்திரை: தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.

துலாம்

குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும.

உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார் ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள்.

வியாபாரிகள் தங்கள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு தகுந்த பொருளாதாரம் பெறுவார்கள்.

சித்திரை:

தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்னைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

சுவாதி: அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.

விசாகம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குலதெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம்

நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள்.

பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். .

விசாகம்: மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.

அனுஷம்:

குடும்பத்திற்கு தேவையான பொருள்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

கேட்டை: தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

தனுசு

பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளில் மனக்கசப்புகள் தோன்றி சீராகும்.

உத்தியோகஸ்தர்கள் துறை சார்ந்த அதிகாரிகளின் நெருக்குதல்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி புதிய அனுபவ பாடங்களைப் பெறுவார்கள்.

பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும்.

மூலம்: தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும்.

பூராடம்:

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்னையில் நல்ல முடிவு வரும்.

உத்திராடம்: உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள்.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும்.

மகரம்

நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும்.

சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர்.

உத்திராடம்:

புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும்.

திருவோணம்:

பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள்.

அவிட்டம்: உங்களுக்கு நன்மைகள் தரும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும்.

கும்பம்

வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும்.

அவிட்டம்: வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள்.

சதயம்: உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள்.

பூரட்டாதி: சந்தாண பாக்கியம் கிட்டும். நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

மீனம்

சொல்லால் மகத்துவமும் செயலால் புகழ் கீர்த்தி ஆகியனவும் ஏற்படும். வீடு மனை வாகனம் ஆகிய இனங்களில் மராமத்து பணிகள் செய்வதற்கு முன் யோசித்து செய்யவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும்.

நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும்.

பூரட்டாதி: உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும்.

உத்திரட்டாதி: விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும்.

ரேவதி: புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..