அஸ்ஸாமில் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுமார் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
20 மாவட்டங்களில் சுமார் 6.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தின் முக்கிய நதியான பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.
கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 1300 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் அசாமில் நிலச்சரிவு, மழை, வெள்ளம் பாதிப்புகளால் இதுவரை 40-க்கும் பலியாகினர்.
சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
திப்ரூகர், லட்சுமிபூர், கம்ரிம், கரிட்சான்ஜ், திமாஜி, கசர், லக்கிம்பூர், கரிம்கஞ்ச் உள்பட 20 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
காசிரங்கா தேசியப் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
படங்கள் | ஏபி நியூஸ்ரூம்