DIN
கர்நாடகத்தில் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பானி பூரிகள் தரமற்றவை என்பது நிரூபனமாகியுள்ளது.
மொத்தம் சேகரிக்கப்பட்ட 260 மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறப்பொடிகளும் புற்றுநோய் உண்டாக்கும் வேதியியல் ரசாயனங்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(எஃப்எஸ்எஸ்ஏஐ) மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பானி பூரிகளில் பயன்படுத்தப்படும் நிறப்பொடிகளால் வயிறு உபாதைகள் தொடங்கி இதய பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் உண்டாக்குமென புற்றுநோய் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்நாடகத்தில் சிக்கன் கெபாப்ஸ், கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் ஆகிய உணவுகளில் ’ரோடைமைன்-பி’ உள்ளிட்ட செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்த சமீபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பானி பூரிகளில் சேர்க்கப்படும் பொருட்களால் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்ற தகவல் பானி பூரி பிரியர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.