வரம் தரும் வாரம்!

DIN

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வருமானம் ஓரளவு மேம்படும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். ஸ்பெகுலேஷன் துறைகளில் சாதகமான திருப்பம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் பிறரை நம்பி பொறுப்பை ஒப்படைக்க மாட்டீர்கள். வியாபாரிகளுக்கு வளர்ச்சி உண்டாகும். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கலைத்துறையினர் பிறருக்கு உதவுவீர்கள்.

பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு உடற்பயிற்சியில் நாட்டம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தொழிலில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உழைத்து முன்னேறுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களைப் பாதுகாப்பீர்கள். வியாபாரிகளோ வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையுடன் நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் நண்பர்களைத் தேர்வு செய்து பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 19, 20.

தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வீர்கள். புகழ் உயரும். அந்தஸ்து உடையவர்களிடம் கவனமாகப் பழகுவீர்கள். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளைக் கற்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் மேன்மையைக் காண்பீர்கள். திடீர் பணவரவால், விவசாயிகளின் கடன் தீரும்.

அரசியல்வாதிகள் கவனத்துடன் இருக்கவும். கலைத் துறையினருக்கு பிறருடைய ஆதரவு கிடைக்கும். பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 21, 22.

பொருளாதார நிலை சீராக இருக்கும். முயற்சிகளில் ஏற்பட்ட தடை விலகும். அலைக்கழித்தவர்கள் தாங்களாகவே உதவி செய்வார்கள். வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்குத் தானிய உற்பத்தி அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்குப் பாராட்டுகள் குவியும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முயற்சிப்பீர்கள்.

மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

தொழிலை புதிய உத்வேகத்துடன் நடத்துவீர்கள். சொத்துகளை வாங்குவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். பொறுப்பான பதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு வழிகாட்டுவீர்கள். வியாபாரிகள் வரவு} செலவு கணக்குகளைச் சரிபார்ப்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 25.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். எதிரிகளும் நட்பு பாராட்டுவார்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசு உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகள் ரகசியங்களை எவருடனும் பகிர வேண்டாம். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கி வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இணக்கமான சூழல் உருவாகும். கலைத் துறையினரின் மதிப்பு உயரும். பெண்கள் பதற்றப்படாமல் நிதானத்துடன் காரியமாற்றுவீர்கள். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்களைக் காண்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் விருத்தி அடையும்.

உத்தியோகஸ்தர்கள் தடுமாற்றம் இல்லாமல் பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கலைத் துறையினரின் திட்டங்கள் மேம்படும்.

பெண்களுக்கு பெரியோரின் ஆசி கிடைக்கும். மாணவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

நோய்கள் குணமாகும். குடும்பத்தினர் மீது அன்பு மேலோங்கும். வழக்குகளில் வாய்தா கிடைக்கும். பண வரவு கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நன்மதிப்பு கூடும். வியாபாரிகளுக்கு வருவாய் கிடைக்கும். விவசாயிகளின் முயற்சிகள் வெற்றி அடையும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு அதிகரிக்கும். கலைத் துறையினர் ஒப்பந்தங்களைக் கவனத்துடன் முடிப்பீர்கள்.

பெண்களுக்கு அறிவாற்றல் சாதனைத் திறன், பக்குவம் மேலோங்கும். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்த யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். நிலுவையில் இருந்த சொத்துகள் கைவந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள். வியாபாரிகள் கடின உழைப்பால் நல்ல வருவாய் ஈட்டுவீர்கள். விவசாயிகள் தானிய உற்பத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத் துறையினருக்கு வருமானம் உயரும். பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா செல்வீர்கள். மாணவர்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனக் குழப்பங்கள் நீங்கும். போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள். கடன்களை அடைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் பயிர்களுக்காகச் செலவழிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகளில் பலன் கிடைக்கும்.

கலைத் துறையினர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடைகளை வாங்குவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் போதிய கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். பண வரவு திருப்தியாக இருக்கும். அந்தஸ்தும் கௌரவமும் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். விவசாயிகளுக்கு விவசாயப் பிரச்னைகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம்

அதிகரிக்கும். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மன உற்சாகத்தோடு காரியமாற்றுவீர்கள். எந்தக் காரியத்தையும் சமாளிப்பீர்கள். தைரியமும் மன உறுதியும் உண்டாகும். பங்குச் சந்தையால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிரிகளும் நண்பர்களாவர். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள்

கிடைக்கும். கலைத் துறையினரின் தனித்திறமை வெளிப்படும். மாணவர்களுக்குப் புதிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..