மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரை.
பட்ஜெட் தயாரிப்பு திட்டமிடலில் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.
ஜிஎஸ்டி போன்ற வரித் தீவிரவாதத்தால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பேச்சு.
மகாபாரத சக்கர வியூகத்தில் அபிமன்யூ சிக்கியது போல், 21ஆம் நூற்றாண்டின் சக்கர வியூகத்தில் இந்திய மக்கள் சிக்கியுள்ளனர்.
அதானி, அம்பானி பெயர்களை பயன்படுத்தியதற்கு பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டதால், ஏ1, ஏ2 என்று ராகுல் காந்தி பேசினார்.
நான் பேசும்போது ஆளுங்கட்சி நண்பர்கள் சிரித்தாலும் அவர்கள் அச்சத்தில்தான் உள்ளனர் என்றார் ராகுல் காந்தி.