தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். புத்தி சாதுர்யம் கூடும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும்.உத்தியோகஸ்தர்களிடம் பிறர் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் சௌகரியங்களைப் பாராமல் உழைப்பீர்கள். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும்.அரசியல்வாதிகளுக்கு ஆதரவு பெருகும். கலைத் துறையினரின் பணிகள் சுமுகமாக நிறைவடையும். பெண்கள் குடும்பப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்கள் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
வருமானம் சீராக இருக்கும். வங்கிக் கடன் பெற்று, புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். மகிழ்ச்சியான சூழல் நிலவும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் புதிய வியாபாரம் தொடங்க முயற்சிப்பீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.அரசியல்வாதிகளின் பேச்சை தொண்டர்கள் கேட்பார்கள். கலைத் துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பெண்களின் மனம் தெளிவாக இருக்கும். மாணவர்கள் விரும்பிய படிப்பில் சேர்வீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பீர்கள். போட்டிகளுக்கேற்ப செயல்முறைகளை மாற்றுவீர்கள். குடும்பத்தினருடன் இணக்கத்தை வைத்துக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைகளுக்கு மாற முயற்சிப்பீர்கள். வியாபாரிகள் போட்டிகளில் இருந்து விடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.அரசியல்வாதிகள் பயணத்தை மேற்கொள்வீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் குழந்தைகளால் மகிழ்வீர்கள். மாணவர்கள் புதிய மொழிகளைக் கற்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் குதூகலம் நிறையும். உடனிருப்போர் ஆதரவாய் இருப்பார்கள். குடும்பத்துடன் புனித திருத்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த காலத்துக்குள் முடிப்பீர்கள். வியாபாரிகள் கடினமாக உழைப்பீர்கள். விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள்.அரசியல்வாதிகளுக்கு ஆதரவு பெருகும். கலைத் துறையினரின் காரியங்கள் சுமுகமாக நிறைவடையும். பெண்கள் குடும்பத்தினரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழிலை சீராக நடத்துவீர்கள். புதிய வீடு வாங்க முயற்சிப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.உத்தியோகஸ்தர்களிடம் பகைமை கொண்டவர்கள் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய வியாபாரம் தொடங்குவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் எண்ணங்களை அறிவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தெளிவும் தீர்வும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு பழைய அனுபவம் கைகொடுக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.அரசியல்வாதிகள் விவேகத்துடன் செயல்படுவீர்கள். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் சேமிப்பை அதிகமாக்குவீர்கள். மாணவர்கள் விரும்பிய கல்வி நிலையங்களில் சேர்வீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளுக்கு அறிவுரைகளை வழங்குவீர்கள். கடன்கள் வசூலாகும்.உத்தியோகஸ்கள் அலுவலகப் பயணங்களை வெற்றியுடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வீர்கள். விவசாயிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் பெருகும். கலைத் துறையினரின் பொருளாதார வசதி மேம்படும். பெண்களுக்கு பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
உடல் சோர்வு குறையும். குழந்தைகளை நல்வழிப்படுத்துவீர்கள். ஆன்மிக பலம் கூடும். நெடுந்தூரத் திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் எச்சரிக்கையாக இருப்பீர்கள். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். அரசியல்வாதிகளின் மனதில் புது சிந்தனைகள் உருவாகும். கலைத் துறையினர் எண்ணியதை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் எதிர்பாராத பணவரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - ஜூன் 7, 8, 9.
வருமானம் கூடத் தொடங்கும். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருப்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைக் கேட்டு பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் அதிகமாக லாபம் ஈட்டுவீர்கள். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது.அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றத்தைக் கொண்டுவருவீர்கள். கலைத் துறையினரை ரசிகர்கள் பாராட்டுவார்கள். பெண்கள் பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்பீர்கள். மாணவர் பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள்.சந்திராஷ்டமம் - ஜூன் 10, 11.
சாதுரியமாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். வரவேண்டிய தொகை கைவந்து சேரும். தொழிலில் நண்பர்கள் உதவியாய் இருப்பார்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பெயரும், புகழும் உயரும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் பயிர்களால் லாபம் அடைவீர்கள்.அரசியல்வாதிகளை கட்சி மேலிடம் பாராட்டும். கலைத் துறையினரின் நன்மைகள் கிடைக்கும். பெண்களுக்கு கணவருடனான கருத்துவேறுபாடுகள் மறையும்.மாணவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள்.சந்திராஷ்டமம் - ஜூன் 12, 13.
தொழிலில் மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள். போட்டியாளர்கள் தானாகவே விலகிவிடுவார்கள். சுப காரியங்கள் நடக்கும். வீட்டிலும் வெளியிலும் புகழ் உயரும்.உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெண்கள் பெற்றோர் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் சாதகமான சூழல் நிலவும். திறமையும் தன்னம்பிக்கையும் கூடும். புதிய செயல்களைச் செய்வீர்கள். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வருவாய் படிப்படியாக உயரும்.அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் அனுசரணையாக நடக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். மாணவர்கள் உற்சாக மனநிலையுடன் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.