வார பலன்கள்: 12 ராசிக்கும்!

DIN

பேச்சால் பிறரைக் கவருவீர்கள். புதிய உத்வேகத்துடன் காரியமாற்றுவீர்கள். குடும்பப் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். புதிய நண்பர்களிடம் இருந்து ஒதுங்கியிருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் புதிய விற்பனை முறையை கையாள்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு.

பெண்கள் உறவினர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 21

வருமானம் சீராக இருக்கும். வங்கிக் கடன் பெற்று, புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் புதிய வியாபாரம் தொடங்க முயற்சிப்பீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளின் பேச்சை தொண்டர்கள் கேட்பார்கள். கலைத் துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பெண்களின் மனம் தெளிவாக இருக்கும். மாணவர்கள் விரும்பிய படிப்பில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

உறவினர்கள் தேடி வருவார்கள். புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். சமுதாயத்தில் புகழ் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுக்கு தேவையான ஆதரவை அளிப்பார்கள். வியாபாரிகள் நற்பெயரை எடுப்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளை மேற்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

பெண்கள் குடும்பத்தில் அமைதி நிறைய காண்பீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களுடன் நல்லுறவு தொடரும்.

சந்திராஷ்டமம் - ஜூன் 24, 25.

உங்கள் அந்தஸ்து உயரும். பிரபலமானவர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். தொழிலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உரிய அந்தஸ்து கிடைக்கும். வியாபாரிகள் நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள். விவசாயிகள் விளைச்சல் அதிகரிக்கக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் பெருமை அடைவீர்கள். கலைத் துறையினருக்கு சக கலைஞர்களின் ஆதரவு இருக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வரும். மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 26, 27.

புத்திசாலித்தனத்துடன் காரியமாற்றுவீர்கள். குழந்தைகள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் நிகழும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கோ விவசாயம் மேம்படும்.

அரசியல்வாதிகள் யோசித்தே முடிவெடுப்பீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.

பெண்களுக்கு இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். மாணவர்களின் நெடுநாளைய கோரிக்கைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தொழிலில் சிரமங்கள் ஏற்பட்டாலும், கடும் உழைப்பால் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் தட்டிப் போனாலும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியவர்களின்

உதவிகளைப் பெறுவீர்கள். முக்கிய முடிவுகளைச் சரியாக எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடமையை சரியாக ஆற்றுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சிறப்பைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு பூச்சிகளால் பாதிப்பு இருக்காது.

கலைத் துறையினரின் அந்தஸ்து உயரும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தொழில் நன்றாகவே நடக்கும். அரசு வழியில் சில நன்மைகள் உண்டாகும்.உடன்பிறந்தோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளின் கடன்கள் வசூலாகும்.

அரசியல்வாதிகள் அதிகமாக வெளிவிவகாரங்களில் பங்கேற்பதைத் தவிர்க்கவும். கலைத் துறையினர் அனுகூலமான திருப்பங்களால் மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு உறவினர்களின் உதவி கிடைக்கும். மாணவர்கள் நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தொழிலில் வளர்ச்சி பெற தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். உடனிருப்போருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கடன் வாங்க மாட்டீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் சுமுகமாகவே இருக்கும்.

அரசியல்வாதிகளின் மதிப்பு அதிகரிக்கும். கலைத் துறையினரின் கௌரவம் உயரும். பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள்.

சந்திராஷ்டமம்}இல்லை.

சமூகத்தில் நற்பெயரை எடுப்பீர்கள். உடனிருப்போரை அரவணைத்துச் செல்வீர்கள். போட்டிகள் இருக்காது. தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கருத்தாக இருப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அரவணைத்துச் செல்வீர்கள். விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் துணிந்து முடிவெடுப்பீர்கள். கலைத் துறையினருக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் புனித திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனையாளர்களாக மாறுவீர்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பெற்றோரின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வருமானம் உயரும்.

உத்தியோகஸ்தர்களின் வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரிகளின் முயற்சிகள் வெற்றி அடையும். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கலைத் துறையினருக்கு பொருளாதாரம் சீராகவே இருக்கும். பெண்களுக்கு கணவருடனான புரிதல் மேம்படும். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மன உற்சாகத்தோடு காரியங்களில் ஈடுபடுவீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் சமாளித்து வெற்றி அடைவீர்கள். தைரியமும் மன உறுதியும் உண்டாகும். வழக்குகள் முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பணிப்பளு குறையும். வியாபாரிகள் விவேகமான செயல்பாட்டால் லாபம் ஈட்டுவீர்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளின் எண்ணங்கள் ஈடேறும். கலைத் துறையினருக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற்று முன்னேறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

உங்கள் எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். பணவரவு சிறக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். உங்கள் அந்தஸ்து உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரிகள் கூட்டுத் தொழிலை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் புது குத்தகைகளை எடுக்க முயற்சிப்பார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் காரியங்களைச் சாதிப்பார்கள். கலைத் துறையினரின் தனித்திறமை பளிச்சிடும்.

பெண்கள் சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்