DIN
தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. தூக்கத்தைப் பாதிக்கும் உணவுகள் இதோ.
தக்காளியில் உள்ள டைராமின் என்கிற வேதிப்பொருள் மூளையை செயல்பாட்டிலேயே வைத்திருக்கும்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்ட வெள்ளை ரொட்டி அதீத சர்க்கரை அளவினைத் தூண்டி தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் காரசாரமான உணவுகள் தூக்கத்தைக் கெடுக்கும்.
ஐஸ்கிரீமில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் இனிப்பு சுவை தூக்கத்தைக் கொடுத்தாலும் மறுபுறம் இன்சுலின் அளவு அதிகரிப்பது தூக்கத்தைப் பாதிக்கும்.
சாக்லேட்டில் உள்ள டைரோசின் உங்களை விழிப்புடன் வைத்திருக்கும். தியோப்ரோமைன் இதய துடிப்பை அதிகரிக்கும்.
அதிக செரிமானத்தைக் கோரும் எந்த உணவும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.