காடுகள் ஏன் முக்கியமானவை?

இணையதள செய்திப்பிரிவு

இன்றைக்கு உருவாகி வரும் காலநிலை மாற்ற விளைவுகளைத் தடுக்க.. காடுகளின் பங்களிப்பு பெரிதாக தேவைப்படும்.

மலேரியா முதல் புற்றுநோய் வரையிலான நோய்களுக்கான மருந்து மழைக்காடுகளில் இருந்தே பெறப்படுகிறது.

உலகின் மாசுக்களை காடுகள் வடிகட்டுகின்றன. அவற்றால் 99 சதவிகித பாஸ்பரஸ் மர்றும் நைட்ரஜன் செறிவுகளை குறைக்கவியலும்.

வெப்பமண்டல காடுகள் பூமியின் பரப்பில் 10 சதவிகிதம் மட்டுமே இருப்பினும் உலகில் உள்ள ஒட்டுமொத்த உயிரினங்களில் பாதிக்கும் மேலானவற்றுக்கு அவை வீடாக அமைகின்றன.

35 கோடிக்கும் அதிகமான மக்கள் காடுகளை அவர்களின் வாழ்வாதாரத்துக்கு நம்பியிருக்கிறார்கள்.

பழங்குடி மக்களின் இருப்பிடமாக காடுகள் உள்ளன.

காடுகள் விலங்குகளுக்கு உணவாகின்றன. அதுபோலவே விலங்குகள் மூலமாக விதைகளைப் பரப்பி காடு உயிர்ப்போடு தன்னை வைத்து கொள்கிறது.

மழைக்கான அடிப்படை காரணிகளில் காடுகளுக்கு பெரும்பங்கு உண்டு.

உலகளவில் காடுகளில் உள்ள மரங்கள் மிக குறைந்த வயதில் மறைகின்றன. அவை சுத்திகரிக்கும் காற்றின் அளவு இதனால் பாதிப்புக்குள்ளாகிறது.

காடுகள் அழிக்கப்படுவதால் இயற்கை பன்மைத்துவம் பாதிக்கப்படுகிறது. மார்ச் 21- உலக காடுகள் தினம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்