இன்றைய ராசி பலன்கள்!

DIN

மேஷம்

இன்று பூர்வீகச் சொத்தில் இழுபறி தொடரும். தொழில் மந்த கதிக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

ரிஷபம்

இன்று குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மிதுனம்

இன்று தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்

இன்று விரோதங்களையும் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டி வரலாம். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள். அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

சிம்மம்

இன்று உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புண்டு. எதிர்ப்படும் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட்டு சாமர்த்தியமாய் நஷ்டங்களையும் இழப்புகளையும் தவிர்த்திடுவீர்கள். மனம் நிம்மதியடையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி

இன்று வருமானம் பெருகினும் செலவுகளும் கூடும். மன இறுக்கம் நீங்கி புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் நோயால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தவர்கள் குணமடந்து வீடு திரும்புவர். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த மனக் கசப்புகள் மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

துலாம்

இன்று பகைவர்களின் தொல்லை குறையும். நீதிமன்றத்தில் இதுவரை அலைக்கழித்த வழக்குகள் முடிவடையும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபரம் சிறந்து வருமானம் பெருகும். பணம் கையில் சரளமாகப் புரளும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

விருச்சிகம்

இன்று சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். பயணங்களின்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்து போக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு

இன்று கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால், பிரச்னைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

மகரம்

இன்று பலவகை யோகம் உண்டாகும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கும்பம்

இன்று கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும். பணப் பற்றாக்குறையால், குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்

இன்று உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்