கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

DIN

கோடைக்காலம் வந்தாலே பேக்-பேக் கட்டிக் கொண்டு சுற்றுலா செல்கிறோமோ இல்லையோ எங்குச் செல்லலாம் என கூகுளில் தேடுவோம். அப்படி பலராலும் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள் இதோ.

பழைமையான நாகரீகம் மற்றும் புகழ்பெற்ற நினைவிடங்கள் உள்ள எகிப்து அதிகம் தேடப்படும் பயணப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

இரவுநேர கொண்டாட்டத்துக்கும் சாலையோர உணவுகளுக்கும் புகழ்பெற்ற தாய்லாந்து 7-வது இடத்தில் உள்ளது.

மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் உலகளவில் வைனுக்கு புகழ்பெற்றது.

கடற்கரைகளுக்கும் அபூர்வ கட்டடக் கலைக்கும் புகழ்பெற்ற குரோஷியா 5-வது இடத்தில் உள்ளது.

உயர்தர கலாச்சாரம் மற்றும் நல்ல அதிர்வு கொண்ட தெருக்கள் உள்ள போர்ச்சுகல் 4-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

சுவையான உணவுக்கும் ரம்மியமான தெருக்களுக்கும் பேர் பெற்ற இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது.

யூனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 47 பாரம்பரிய இடங்கள் கொண்டுள்ள ஸ்பெயின் இரண்டாவது கனவு சுற்றுலா தலமாக விளங்குகிறது.

மத்திய கிழக்கு கலாச்சாரம் மிளிரும் கிரீஸ்- கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலத்தில் முதல் இடத்திலுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்