யோகம் தரும் நாள்!

DIN

மேஷம்

இன்று மிகவும் சிறப்பான காலகட்டமாகவே இருக்கிறது என சொல்லலாம். பொருளாதார வளமும் பெண்களால் அனுகூலமும் கிடைக்கும். இருந்தாலும் அவ்வப்போது பொருள் இழப்பும், சிறுசிறு உடல் உபாதைகளும் ஏற்படலாம். இவ்வளவு நாட்களாக இருந்து வந்த பிள்ளைகளால் பிரச்சனை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ரிஷபம்

இன்று குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்தாலும் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். பல்வேறு நன்மைகள் நிகழும். உங்கள் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். அதே வேளையில் காலகட்ட பிற்பகுதியில் பொருள் விரையமும் வேலையில் பிந்தங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மிதுனம்

இன்று எந்த பிரச்னைகளையும் முறியடிக்கும் வல்லமைகளும் பெறலாம். குடும்பத்தில் வசதிகள் தொடரும். ஆடம்பர பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். சற்று சிரத்தை எடுத்தால் சாதனைகள் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்

இன்று மிகவும் சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அனைத்தும் நன்மையே கிடைக்கும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக பொருளாதார வளம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

சிம்மம்

இன்று காரிய அனுகூலம் கிடைக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தடைப்பட்ட ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கடந்த காலமாக தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி

இன்று நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

துலாம்

இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

விருச்சிகம்

இன்று பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடந்த காலத்தை விட சிறப்பான லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு

இன்று நன்மைகள் கிடைக்கும். பலவிதமான துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மகரம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். சுப நிகழ்ச்சிகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். அனைத்தும் சுபமாக நிகழும். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கும்பம்

இன்று எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்து விடவேண்டாம். வியாபாரிகள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மீனம்

இன்று தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்