வார பலன்கள்: 12 ராசிக்கும்..

DIN

மேஷம்

உடல் ஆரோக்கியம், மனவளம் சீராகவே இருக்கும். சிலர் ஆடம்பர வீட்டுக்கு மாறுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்களுக்கு மங்களகரமான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம்

உங்கள் திட்டங்கள் நிறைவேறும். விரைந்து செயல்படுவீர்கள். பொருளாதாரமும் சாதகமாகவே இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் பொறுப்புடன் நடந்து வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு குத்தகைகளால் நன்மைகள் உண்டாகும்.

அரசியல்வாதிகள் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத் துறையினரின் கனவு பலிக்கும். பெண்களுக்கு மனதில் தெளிவு பிறக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கனவு நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம்

சோம்பேறித் தனத்தை குறைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். பெற்றோரின்ஆதரவினால் குடும்பத்தில் அமைதி நிறையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வியாபாரிகளுக்கு வருமானம் உயரத் தொடங்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும். கலைத் துறையினரின் லட்சியம் நிறைவேறும். பெண்களுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

மாணவர்கள் பொழுதுபோக்குகளில் நேரத்தை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை

கடகம்

தொழிலில் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்வீர்கள். பணத்தட்டுப்பாடு இருக்காது. குழந்தைகளின் முன்னேற்றம் சிறக்கும். உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வங்கி உதவி தாமதமாக இருக்கும். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத் துறையினர் நன்மை பெறுவீர்கள்.

பெண்கள் சேமிப்பு விஷயத்தில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு பெற்றோர்களால் கோரிக்கை நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம்

வருமானம் படிப்படியாக உயரும். நெருங்கிய உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். எதிர்ப்புகளில் இருந்து விடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் பாராமுகமாகவே இருப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்க புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புதிய யுக்தியுடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்களுக்கு பணவரவு சிறக்கும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை

கன்னி

மனதில் தேங்கிக் கிடந்த திட்டங்கள்செயல்படத் தொடங்கும். செயல்பாடுகளால் தனித்திறமை வெளிப்படும். விரோதிகளிடம் கவனமாக இருப்பீர்கள். பெரியோர்களின் ஆதரவு சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் வேலைகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு சிறிய தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவார்கள்.

விவசாயிகள் நீர்வளத்தால் மகசூல் பெருகும். கலைத் துறையினர் காரியங்களை சிறப்பாகச் செய்வீர்கள்.

பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நண்பர்கள் உதவுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம்

உங்களை பிறர் பாராட்டுவார்கள். நல்ல தகவல்கள் கிடைக்கும். புதிய தொழில்களில் கால் பதிப்பீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் விஷயங்கள் லாபமாக அமையும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் சமூகப் பணிகளைத் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். கலைத் துறையினர் புதிய தொழில்நுட்பங்களை அறிவீர்கள்.

பெண்கள் மனநிறைவோடு காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 10

விருச்சிகம்

குடும்பத்தில் மேன்மை உண்டாகும். உடனிருப்போரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு அக்கறை செலுத்துவீர்கள். தொழிலை மேம்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பிறரின் பணிகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்கள் உதவுவார்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தாமதமாக முடியும்.

பெண்களுக்குத் தெய்வ வழிபாடு நன்மை பயக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - மே 11, 12

தனுசு

பல தடைகளைத் தாண்டி உங்கள் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலைகள் சாதகமாக அமையும். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் முயற்சிக்கேற்ப லாபம் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். கலைத் துறையினர் ஒப்பந்தங்களில் வருவாய் பெறுவீர்கள். பெண்கள் கவனமாக இருக்கவும். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 13, 14, 15.

மகரம்

குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரிகள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளைத் தள்ளிப் போடவும்.

அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் உருவாகும். கலைத் துறையினர் அந்தஸ்தான வேலைகளில் ஈடுபடுவீர்கள். பெண்கள் பெற்றோரின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - மே 16

கும்பம்

குடும்பத்தினரிடையே இணக்கமான சூழல்நிலை உருவாகும். பிறரிடம் இன்முகத்தோடு பழகுவீர்கள். உதவி செய்தவர்களுக்கு நன்றி காட்டுவீர்கள். பெரியோரின் ஆசி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு படிப்படியாக வேலைச் சுமை குறையும். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் செலவு உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு கூடும். கலைத் துறையினர் கேளிக்கைகளில் மகிழ்வீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வீர்கள். மாணவர்கள் முன்னேற்றப் பாதைக்கு முயற்சிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம்

தொழிலில் சீராகப் பணி நடக்கும். வருமானம் படிப்படியாக உயரும். ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். தெளிவாகச் சிந்தித்து பேசுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேறு நல்ல வேலைக்கு மாறுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடவும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களால் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் சிறந்த படைப்புகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்