வைகாசி மாதப் பலன்கள்!

DIN

மேஷம்

இந்த மாதம் மனதிடம் அதிகரிக்கும். அதே வேளையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கை கூடி வரும். பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்துபேசுவதில் கவனம் தேவை.

அஸ்வினி: தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும்.

பரணி: எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்னைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கார்த்திகை: மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்ட நாள்களாக இருந்த பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கி வரலாம்.

ரிஷபம்

பணவரத்து இந்த மாதம் திருப்தி தரும். அதே வேளையில் சுபச்செலவுகள் அதிகமாகும். திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம் கவனம்.

கார்த்திகை: இந்த மாதம் புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும்.

ரோகினி: தொழில், வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள்.

மிருகசீரிஷம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும்.

பரிகாரம்: தினமும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்னை தீரும்.

மிதுனம்

அதிக முயற்சிக்கு எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும்.

மிருகசீரிஷம்: சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும்.

திருவாதிரை: பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.

புனர்பூசம்: இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெளிநாட்டிற்கும் செல்ல வேண்டி வரும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.

கடகம்

வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.

புனர்பூசம்: மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து சேரும்.

பூசம்: நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும்.

ஆயில்யம்: இந்த மாதம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும்.

பரிகாரம்: திங்கள்கிழமையன்று அருகிலிருக்கும் அம்மனை தரிசித்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவர மனகுழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.

சிம்மம்

மிக நல்ல பலன்களை இந்த மாதம் பெறப் போகிறீர்கள். சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தேக்க நிலை அடியோடு மாறும்.

மகம்: நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் நண்பர்களுடன் கலந்தாலோசிக்கவும். நீண்ட நாள்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும்.

பூரம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

உத்திரம்: உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் குறையும்.

பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி

நீங்கள் முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும்.

உத்திரம்: மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். நீண்ட நாள்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும்.

ஹஸ்தம்: தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும்.

சித்திரை: நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள்.

பரிகாரம்: துளஸியை ஐயப்பனுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்

கோபம் மறைந்து நிதானம் அதிகரிக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

சித்திரை: உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும். எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும்.

ஸ்வாதி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள்.

விசாகம்: சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலில் தாயாருக்கு தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

விருச்சிகம்

எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள்.

விசாகம்: தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம்.

அனுஷம்: இந்த மாதம் உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும்.

கேட்டை: பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்னைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.

தனுசு

பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது.

மூலம்: நல்ல சிந்தனை ஏற்படும். மனோபலம் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம்.

பூராடம்: இந்த மாதம் சகோதரர்கள் வகையில் பகை வரலாம். அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும்.

உத்திராடம்: எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று சித்தர்களை வணங்க வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.

மகரம்

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

உத்திராடம்: இந்த மாதம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான எல்லா காரியங்களும் வெற்றிபெறும்.

திருவோணம்: முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

அவிட்டம்: நீண்ட நாள்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம்.

பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளியில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம்

அடுத்தவர்களால் இருந்து வந்த வீண் பிரச்னைகள் அகலும். வாகனங்களில் செல்லும் போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. சுப செலவு அதிகரிக்கும்.

அவிட்டம்: தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

சதயம்: வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.

பூரட்டாதி: வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்ய இயலும். பணத்தை கவனமுடன் கையாளவும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு எள் சாதம் படைத்து காகத்திற்கு வைக்கலாம்.

மீனம்

இந்த மாதம் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும்.

பூரட்டாதி: உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சரியான மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். பண தேவை அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: நீங்கள் விரும்பிய பொருள்கள் வந்து சேரும். கர்ப்பிணிப் பெண்கள் மன உளைச்சலும், சோர்வுக்கும் ஆளாகலாம். உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும்.

ரேவதி: அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக்கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்