உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய், 1997ஆம் ஆண்டு ‘இருவர்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அபிஷேக் பச்சனை 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஆராத்யா என்ற 12 வயது மகள் உள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.