மேஷம்இன்று நீண்ட நா்ள்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ரிஷபம்இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். மனக்கஷ்டம் குறையும். ஆனால் செலவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5
மிதுனம்இன்று வேற்றுமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான எல்லா பொருள்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
கடகம்இன்று கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
சிம்மம்இன்று நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகனம் யோகத்தை தரும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
கன்னிஇன்று மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
துலாம்இன்று நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9
விருச்சிகம்இன்று உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் பிரச்னைகள் ஏற்படலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
தனுசுஇன்று மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
மகரம்இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும் இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண் விவாதம் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
கும்பம்இன்று எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். நீங்கள் அவசரமாக எதையும் செய்யக்கூடாது. சுனக்கத்தில் இருந்த காரியங்கள் வெற்றியடைவதுடன் பணவரத்தும் கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
மீனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9