மேஷம்இன்று நெருக்கடியான நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ரிஷபம்இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும்.. காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5
மிதுனம்இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
கடகம்இன்று தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
சிம்மம்இன்று திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
கன்னிஇன்று பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
துலாம்இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9
விருச்சிகம்இன்று உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது. தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
தனுசுஇன்று பலவிதமான பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
மகரம்இன்று எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 2, 9
கும்பம்இன்று குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5
மீனம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9