தினம் தினம் திருநாளே!

DIN

மேஷம்

இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

ரிஷபம்

இன்று உங்களைவிட்டு விலகியிருக்கும் பிள்ளைகள் வலிய வந்துசேர்வார்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்

இன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். குழந்தைப்பேறு இல்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

கடகம்

இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9,3

சிம்மம்

இன்று வியாபாரத்தில் நல்ல மேன்மையையும் லாபத்தையும் அடைவீர்கள். தங்கவேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவீர்கள். இளைஞர்கள் தக்க வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9,3

கன்னி

இன்று உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வரவேண்டிய நிலுவைகள் வந்துசேரும். அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருப்பார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வலிய வந்துசேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்

இன்று தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9,3

விருச்சிகம்

இன்று வழக்குகள் வெற்றியைத் தரும். வியாபாரிகள், சக வியாபாரிகளால் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சந்தித்து வந்த தடை, தாமதங்கள் விலகிச்செல்லும். திருப்தியான பணவரவுகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு

இன்று தொழிலதிபர்கள் நினைத்தபடி, தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உற்பத்தியைப் பெருக்குவார்கள். காவல்துறையில் பணிபுரியும் ஒருசிலர் திடீர் மாறுதல்களைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த மாறுதல் தள்ளிப்போகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

மகரம்

இன்று திருமணப் பேச்சுகள் கைகூடும். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். மாணவர்கள் எண்ணம் ஈடேறும். வீடு மனை தொடர்பான அலுவல்கள் அனுகூலமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

கும்பம்

இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களால் நல்ல லாபத்தை அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

மீனம்

இன்று வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். இதுவரை தொல்லைகொடுத்த நோய் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்