வார பலன்கள்: 12 ராசிக்கும்!

DIN

உங்கள் முயற்சிகளைத் திட்டமிட்டு செய்வீர்கள். தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டீர்கள். உடனிருப்போர் ஆதரவாய் இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகளை புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகளுக்கு புழுபூச்சி பாதிப்பு குறையும்.

அரசியல்வாதிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினர் காரியங்களை முடித்துவிடுவீர்கள். பெண்களுக்கு கணவரிடம் பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் பிறரிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 24

காரியங்களை முடித்து நற்பெயரை எடுப்பீர்கள். பொருளாதாரம் சீராகவே இருக்கும். இறைப்பணியில் பங்கேற்பீர்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவு கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய கடன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சீராக இருக்கும். விவாசாயிகளுக்கு பிறர் உதவிகரமாய் இருப்பார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் நட்புடன் பழகுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் மருத்துவச் செலவு குறைய காண்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல யோகம் உண்டு.

சந்திராஷ்டமம் - மே 25, 26, 27

தொழில் வளர்ச்சி அடையும். புதிய தொழில் தொடங்க அடித்தளமிடுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். பழைய இழப்புகளைச் சரிகட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்

களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் பயிரிடுதலில் புதிய முறைகளைக் கையாளுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு உயரும்.

கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் குடும்பத்தைத் திறம்பட நடத்துவீர்கள். மாணவர்கள் புதிய பயிற்சிகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 28, 29

உடனிருப்போரை புரிந்துகொள்வீர்கள். மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழிலில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் ஏற்றத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு மானியங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் நன்கு காரியமாற்றுவீர்கள். கலைத் துறையினர் புதிய நுட்பங்களைக் கற்பீர்கள். பெண்கள் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 30

பொருளாதாரம் சீராகவே தொடரும். கைநழுவிய வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். பெற்றோர் வழியில் இணக்கமான சூழல் நிலவும்.

உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பளிச்சிடும். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் சமூகச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்படும். மாணவர்களுக்குத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை

வர வேண்டிய பணம் வசூலாகும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். இறைப்பணியில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் நன்கு உழைத்து நற்பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கடுமையாகக் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு வருவாய் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். மாணவர்கள் தங்களது குறைகளைத் திருத்திக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

உடல் ஆரோக்கியம் மேன்மை அடையும். நினைத்தவை நடந்தேறும். தொழிலில் வளர்ச்சி உண்டு. சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூலில் இருந்த சிரமங்கள் குறையும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையைக் கூட்டிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். உடன்பணிபுரிவோர் சமரசப் போக்கைக் கடைபிடிப்பார்கள். குழந்தைகளுக்கு

அறிவுரைகளைக் கூறுவீர்கள். அரசு சலுகைகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் வாகனங்களுக்குச் செலவழிக்க நேரிடும்.

விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் தொடரும். அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்கு ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். பெண்களுக்கு திருமண யோகம் கூடும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

எதிர்ப்புகள் இருக்காது. பங்கு வர்த்தகத்தில் சிறிது லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க அனுப்புவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும். வியாபாரிகள் கூடுதலாக உழைப்பீர்கள். விவசாயிகள் தொழிலாளர்களுக்கு உதவியாக இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்திடம் நல்ல முறையில் நடப்பீர்கள். கலைத் துறையினருக்கு உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். பெண்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

வருமானம் படிப்படியாக உயரும். பிரிந்த உறவினர்கள் மீண்டும் இணைவார்கள். பெற்றோரின் உடல் உபாதைகள் தீரும். நிறுத்திய தொழிலை மீண்டும் நடத்துவீர்கள். ஹ

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைத்திறன் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு சிறிய முதலீடுகளில் கூடுதல் வருவாய் கிடைக்கும். விவசாயிகள் அதிக விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு காரியங்களில் வெற்றி கிடைக்கும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கூடும். பெண்களுக்கு பண வரவு சீராகவே இருக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். முக்கிய முடிவு எடுக்கும்போது அனுபவம் கைகொடுக்கும். எதிர்ப்புகள் நிலவும். ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைத் திறன் கூடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சுமுகமாக இருக்கும். விவசாயிகளின் பழைய நிலங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும்.

அரசியல்வாதிகளுக்கு அரசுத் துறையில் ஆதரவு பெருகும். கலைத் துறையினரின் தனித்திறமைகள் பளிச்சிடும். பெண்கள் விட்டுக் கொடுத்து சாதிப்பீர்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். உயர்ந்தோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பீர்கள். முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு ஆதரவு பெருகும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய யுக்தியுடன் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். பெண்களுக்கு நல்ல யோகம் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்