குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பிரிந்திருந்த உறவினர்கள் மீண்டும் ஒன்றுசேர்வார்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.உத்தியோகஸ்தர்களின் பணவரவுக்கு தடை இருக்காது. வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். அரசியல்வாதிகள் முழு வேகத்துடன் ஈடுபடுவீர்கள்.கலைத் துறையினருக்குப் பாராட்டு கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் பெற்றோரின் பேச்சை கேட்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
தெய்வ பலம் கூடும். சுய முயற்சி, புத்திசாலித்தனத்தால் கடினமான காரியங்களிலும் சாதிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகளில் ஈடுபடலாம். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குடும்ப அமைதியைக் காப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் நிலவிவந்த பிரச்னைகள் குறையும். அரசு சலுகைகள் கிடைக்கும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். வியாபாரிகள் விற்பனை முறைகளை மாற்றுவீர்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி சீராகும்.அரசியல்வாதிகள் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத் துறையினர் பிறர் உதவிகளைப் பெறுவீர்கள். பெண்கள் அமைதியுடன் நல்லுறவைப் பேணுவீர்கள். மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
சிறிய முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். உடனிருப்போருக்கு உதவுவீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்போர் உதவுவார்கள். வியாபாரிகள் கடுமையாக உழைப்பீர்கள். விவசாயிகளுக்கு லாபம் பெருகும்.அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்ட திருப்பங்கள் உண்டாகும். கலைத் துறையினருக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். பெண்கள் இன்முகத்துடன் இருப்பீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் கவனம் செலுத்துவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை
மனக் குழப்பங்கள் நீங்கும். பொருளாதாரம் மேன்மையடையும். திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். உயர்ந்தோரின்ஆதரவைப் பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் பணியிடமாற்றத்தையும் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல யோகம் உண்டும். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல் உண்டாகும்.அரசியல்வாதிகள் கவனத்துடன் இருக்கவும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரோடு அனுசரித்து இருப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். புதிய வீடு வாங்க முயற்சிப்பீர்கள். போட்டிகள் இருக்காது.உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டாகும்.அரசியல்வாதிகள் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கலைத் துறையினர் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம் - இல்லை.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும். எதையும் சமாளிப்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் கூடுவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களை விளைவிக்க முற்படுவீர்கள்.அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினர் முத்திரையைப் பதிக்க முயற்சிப்பீர்கள். பெண்கள் விருந்தினர்கள் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் புதிய பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.சந்திராஷ்டமம் -இல்லை.
புதிய ஆசைகள் தோன்றும். இல்லத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பிறரிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் உண்டு. வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். விவசாயிகளுக்கு கூட்டு குத்தகையால் லாபம் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டு. கலைத் துறையினருக்கு முன்னேற்றம் உண்டு. பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் கேளிக்கைகளில் ஆர்வத்தைக் குறைப்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.
புத்திசாலித்தனத்தால் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். பெரியோர்களை ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெற்றோர் மனம் கோணாமல் நடப்பீர்கள். கடன்களைத் திரும்ப அடைப்பீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். வியாபாரிகள் வியாபாரத்தை மேம்படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் சற்று குறையும்.அரசியல்வாதிகள் மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத் துறையினருக்கு ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். மாணவர்கள் பாராட்டும்படி நடப்பீர்கள்.சந்திராஷ்டமம் - நவம்பர் 22
தொழிலை மேம்படுத்துவீர்கள் குடும்பத்தில் சிறு குழப்பங்கள் நிலவும். பணவரவில் தாமதம் ஏற்படும். பெற்றோர் அறிவுரையை கேட்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகளின் ஆலோசனைகளை கூட்டாளிகள் கேட்பார்கள். விவசாயிகள் குத்தகை பாக்கியை வசூலிப்பீர்கள்.அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் ஆதரவு அளிப்பார்கள். கலைத் துறையினருக்கு நற்பெயர் உண்டாகும். பெண்களுக்கு உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.சந்திராஷ்டமம் - நவம்பர் 23, 24.
இனிமையான செய்திகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வயிற்று உபாதைகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை உயரும்.உத்தியோகஸ்தர்களின் பேச்சை மேலதிகாரிகள் கேட்பார்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத் துறையினர் பக்தியுடன் ஈடுபடுவீர்கள். பெண்கள் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்வீர்கள். மாணவர்கள் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பீர்கள்.சந்திராஷ்டமம் - நவம்பர் 25, 26, 27.
உடனிருப்போர் பாராட்டும் வகையில் நடப்பீர்கள். சொத்துகளில் வருவாய் வரத் தொடங்கும். புதிய வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் கூடும். வியாபாரிகள் அதிக லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள் பெண்கள் செலவைக் குறைப்பீர்கள். மாணவர்கள் பெரியோர் சொல் கேட்பீர்கள்.சந்திராஷ்டமம் - நவம்பர் 28.