அக்டோபர் மாத பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

DIN

மேஷம்

வீண்குழப்பம் ஏற்படும். பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.

அஸ்வினி: எடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் வாங்குவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாகும்.

பரணி: உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

கார்த்திகை 1ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.

ரிஷபம்

பண வரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

ரோகிணி: திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.

மிதுனம்

எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

திருவாதிரை: இந்த மாதம் பக்குவமான அணுகுமுறையினால் எந்த செயலிலும் வெற்றி பெறுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பிரயத்தனம் எடுப்பீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த மாதம் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.

கடகம்

இந்த மாதம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.

பூசம்: எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்னைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

ஆயில்யம்: மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். உடல் ஆரோக்கியம் பெறும்.

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் அம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட மனகுழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.

சிம்மம்

எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

மகம்: குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது.

பூரம்: அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.

உத்திரம் 1ம் பாதம்: தடை தாமதம் ஏற்படலாம். கூடுதல் கவனத்துடன் இருப்பதும் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் நல்லது. உடல் ஆரோக்கியம் உண்டாகும். செலவுகள் கூடும்.

பரிகாரம்:பிரதோஷ காலத்தில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி

காரிய வெற்றி உண்டாகும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்: அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது.

அஸ்தம்: வியாபாரிகள் சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும்.

சித்திரை 1, 2, பாதம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்: ஸ்ரீசாஸ்தாவை வணங்கி வர சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.

துலாம்

திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது.

சித்திரை 3, 4 பாதம்: ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.

சுவாதி:

எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்:

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர் பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

விருச்சிகம்

பலவகையான யோகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும்.

விசாகம் 4ம் பாதம்: குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அனுஷம்: முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.

கேட்டை: எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். உங்களது கருத்துக்கு மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.

தனுசு

பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

மூலம்: தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் குறையும்.

பூராடம்: குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்: தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும்.

பரிகாரம்: நவக்கிரகங்களில் குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.

மகரம்

ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப்பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

திலும் சிக்காமல் நழுவுவது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

திருவோணம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம்

அடுத்தவர்களுக்கு உதவப்போய் அதனால் அவதிப்பட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

அவிட்டம் 3, 4 பாதம்: சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

சதயம்:

இந்த மாதம் ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுப்பீர்கள். எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையில் எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறை யும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மீனம்

இந்த மாதம் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது.

உத்திரட்டாதி: வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.

ரேவதி: அதிகார தோரணையுடன் காணப்படுவீர்கள். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..