DIN
தொழிலில் உன்னதமான வளர்ச்சியைக் காண்பீர்கள். உடனிருப்போருக்கு உதவுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் இழுபறியான காரியங்களில் முடிவைக் காண்பீர்கள். கலைத் துறையினரின் செல்வாக்கு உயரும்.
பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா செல்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் கூடும்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 7, 8.
வாகனங்களை வாங்குவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, சூட்சும அறிவு பயன்படும். நல்ல பெயரை எடுப்பீர்கள்.
ஆன்மிகப் பெரியோரிடம் ஆசி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளின் கௌரவத்துக்கு குறைவு வராது.
விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் பணிகளை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினரின் தனித்திறமை வெளிப்படும்.
பெண்கள் இறைபலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 9, 10.
பொருளாதாரம் ஏற்றமாகவே இருக்கும். கடன்களை அடைத்துவிடுவீர்கள். காரியங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் பெயரும் புகழும் கூடும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன
வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் உயர்ந்தோரைச் சந்திப்பீர்கள்.
பெண்கள் ஆன்மிகத்தில் தர்மக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் உடனிருப்போருடன் நட்புடன் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் இருந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.
உத்தியோகஸ்தர்கள் சுய மதிப்பை விட்டுக் கொடுக்காமல் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். விவசாயிகள் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
அரசியல் வாதிகள் கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினருக்கு உற்சாகமான சூழல் அமையும்.
பெண்கள் சுமுகமான உறவைத் தக்க வைப்பீர்கள். மாணவர்கள் நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உறவினர்கள் மதித்து நடப்பார்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
பயணங்கள் செய்ய நேரிடும். சொத்துகளை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மகிழ்ச்சியான சூழலைக் காண்பீர்கள்.
வியாபாரிகள் கடையை அழகுப்படுத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். விவசாயிகள் நன்மைகள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு பெருகும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மாணவர்கள் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். தர்மக் காரியங்களிலும், திருப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பத்திரங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும்.
உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு புழுபூச்சிகளால் பிரச்னை ஏற்படாது.
அரசியல்வாதிகள் மேலிடத்திடம் அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல தகவல் வந்து சேரும். பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
நீண்ட காலத் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். சிந்தனைகள் மேலோங்கும். நண்பர்களிடம் ஒதுங்கியிருப்பீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். விவசாயிகள் நீராதாரத்தைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ரகசியங்களைப் பகிர வேண்டாம். பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நண்பர்களின் ஆதரவைக் காண்பீர்கள். விவசாயிகள் பூச்சிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் உண்டாகும். கலைத் துறையினர் நுட்பமான பயிற்சிகளை அளிப்பீர்கள்.
பெண்களுக்கு மதிப்பு உயரும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். திருப்திகரமான சூழல் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். பொருளாதாரம் மேன்மை அடையும்.
உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைப்பீர்கள். வியாபாரிகள் வெற்றிகளைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள்.
கலைத் துறையினர் வருவாய் உயரக் காண்பீர்கள். பெண்கள் குழந்தைகளால் உற்சாகம் அடைவீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரம் மேன்மையடையும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பிரச்னைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் தேடி வரும். விவசாயிகள் வரப்புப் பிரச்னைகளில் கவனமாக இருக்கவும்.
அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் காரியங்கள் எளிதில் முடிவடையும். கலைத் துறையினர் புதிய முத்திரைகளைப் பதிப்பீர்கள்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நலமாக இருக்கும். மாணவர்கள்பிறரிடம் நிதானமாகப் பேசவும்.
சந்திராஷ்டமம்}இல்லை.
தொழிலில் பொறாமைகள் குறையும். பிறர் நன்மதிப்பை மேம்படுத்தும் வகையில் நடப்பீர்கள். தேவையற்ற வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த வருவாயைப் பெறுவீர்கள். வியாபாரிகள் மன உறுதியுடன் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நல்ல பலன் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் நல்ல வருவாயைக் காண்பீர்கள். பெண்கள் இல்லத்தில் மகிழ்ச்சியை காண்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்க விளையாட்டுகளைக் கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய சூழ்நிலைக்குப் பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். உடலில் பொலிவுடன் மனதில் தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். தொழிலில் புதுமைகளைப் புகுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் எளிதில் வருமானம் ஈட்டுவீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு நன்மதிப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு நண்பர்கள் உதவுவார்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 4, 5, 6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.