வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

வேலைகளைச் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். முக்கிய முடிவுகளை ஆலோசித்து எடுப்பீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டு.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடப்பீர்கள். வியாபாரிகள் உடனிருப்போருக்கு மதிப்பு அளிப்பீர்கள். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அளிப்பார்கள்.அரசியல்வாதிகள் அந்தஸ்தில் சற்று மேன்மை அடைவீர்கள். கலைத் துறையினர் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். பெண்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் நற்பெயரை எடுப்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

மனஉறுதியைக் கைவிடாமல் முயற்சிப்பீர்கள். தேவைகளைக் குறைப்பீர்கள். தொழிலில் ஓரளவு சீராகச் செல்லத் தொடங்குவீர்கள். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் மனச் சோர்வுக்கு ஆளாவீர்கள். வியாபாரிகள் கவனமாக நடப்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிப்பீர்கள்.அரசியல்வாதிகள் முயற்சிகளைக் கூட்டி செயலாற்றுவீர்கள். கலைத் துறையினருக்குத் திறமைகள் நிரூபிக்கும் வாய்ப்பு அமையும்.பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் சிரமங்களுக்கு இடையே படிப்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

தடைப்பட்ட காரியங்கள் துரிதமாகும். குடும்பப் பொறுப்புகளைச் சாதுரியமாக நடத்துவீர்கள். தெய்வப் பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரும்.உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கலைத் துறையினருக்கு சக கலைஞர்கள் உதவுவார்கள்.பெண்கள் ஏதாவது பிரச்னையில் மனம் தளர்வீர்கள். மாணவர்கள் நம்பிக்கையுடன் படித்து வெற்றி பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - அக். 11, 12, 13.

உழைப்புக்கேற்ற பலன் உண்டு. பெற்றோர் சொற்படி குடும்பத்தினரை அனுசரித்து நடப்பீர்கள். உடன்பிறந்தோருடன் பாசமாக இருப்பீர்கள். காரியங்களில் நிதானம் தேவை.உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்பூசல் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் சுமாராகவே இருக்கும். விவசாயிகள் ஒற்றுமையாக நடப்பீர்கள்.அரசியல்வாதிகள் தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். கலைத் துறையினருக்கு பணவரவு இருக்கும். பெண்கள் குழந்தைகளால் நன்மை அடைவீர்கள். மாணவர்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள்.சந்திராஷ்டமம் - அக். 14, 15.

முயற்சிகள் வெற்றி பெறும். நம்பிக்கை வீண்போகாது. இல்லத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். அரசு கௌரவம் கிடைக்கும்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சுமுகமாக நடப்பீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஓங்கும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி அதிகமாகும்.அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத் துறையினர் எடுத்த காரியங்களை எப்படியாவது முடிப்பீர்கள்.பெண்களுக்கு பண வரவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் உயரும்.சந்திராஷ்டமம் - அக். 16, 17.

தொழிலை விரிவுபடுத்த முனைவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். எதிரிகள் தானாகவே விலகிவிடுவார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும்.உத்தியோகஸ்தர்கள் பாராட்டும்படி நடப்பார்கள். வியாபாரிகள் உயர்வைக் காண்பீர்கள். விவசாயிகள் நிலத்தை நல்ல முறையில் பராமரிப்பீர்கள்.அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் மதிக்கப்படும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.பெண்களுக்கு குடும்பத்தினருடன் ஒற்றுமை மேம்படும். மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.சந்திராஷ்டமம் - இல்லை.

பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தோருடன் சுமுகமாகப் பழகி காரியங்களைச் சாதிப்பீர்கள். வருவாய் சீராகவே இருக்கும். நல்ல மனிதர்களைச் சந்திப்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் மனதைக் கட்டுப்படுத்தவும். வியாபாரிகளுக்கு வாகனச் செலவுகள் ஏற்படும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும்.அரசியல்வாதிகள் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். கலைத் துறையினர் கடுமையாக உழைப்பீர்கள். பெண்கள் கணவரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளால் நல்ல பயனைப் பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

வீண்செலவுகள் செய்ய நேரிடும். வருமானம் சிறப்பாகவே இருக்கும். முயற்சிகளைச் சுறுசுறுப்பாகச் செய்வீர்கள். மூத்தோரின் அறிவுரைக்குச் செவி சாய்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கலைத் துறையினருக்கு பாராட்டு தேடிவரும். பெண்கள் குடும்ப விஷயங்களில் சமரசமாகச் செல்வீர். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

உயர்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தையுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும்.உத்தியோகஸ்தர்களின் திறமைகளை வளர்ப்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்துச் செல்வீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பெறுவதில் தாமதம் ஏற்படும்.பெண்களுக்கு கணவருடனான உறவில் ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் ஆன்மிகத்தில் மனதை ஈடுபடுத்துவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தோற்றப் பொலிவு மாற்றங்கள் உண்டாகும். முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முயற்சிக்கேற்ற அங்கீகாரமும் ஆதாயமும் கிடைக்கும். விவசாயிகள் பிறர் உதவுவார்கள்.அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைத் தேடி பெறுவீர்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்களின் முயற்சிகள் வெற்றி பெறும்.சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தினருடன்சுற்றுலா செல்வீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் சீராகவே அமையும். உத்தியோகஸ்தர்கள் புதிய மாற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் } வாங்கல்நல்லபடியாக அமையும். விவசாயிகள் விளைச்சலை மேம்படுத்துவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் கவனமாக இருக்கவும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள்வெளியூர் செல்ல நேரிடும்.சந்திராஷ்டமம் - இல்லை.

மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். பெற்றோர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். உயர்ந்தோரைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனமாக ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள்.அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் நிலவும். கலைத் துறையினருக்கு பிறர் ஆதரவு கிடைக்கும்.பெண்களுக்கு உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களின் திறமைகள் வெளிப்படும்.சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...