DIN
பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத் தரம் மேலோங்கும். தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் காரியங்களை முடிப்பீர்கள். பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை முடிப்பீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கவனத்துடன் இருக்கவும். கலைத் துறையினர் கேளிக்கைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்கள் கணவரின் அன்பைக் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 9, 10, 11.
புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்களிடம் இணக்கம் உண்டாகும். குழந்தைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகள் நெருக்கடியான தருணங்களைச் சமாளிப்பீர்கள்.
கலைத் துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பெண்கள் ஆன்மிகப் பலத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 12.
புத்திசாலித்தனம் கூடும். செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். ஆற்றலும் தைரியமும் பெருகும். வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தைரியத்துடன் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். வியாபாரிகள் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
விவசாயிகள் புதிய கடன்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்குப் பணப் புழக்கத்தில் குறைவு இருக்காது. கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். பெண்கள் பிறரிடம் அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் சுறுசுறுப்பு கூடும். இனிமையான செய்திகள் கிடைக்கும். சுபச் செலவுகளைச் செய்வீர்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்பு குறையும். வியாபாரிகள் கடும் உழைப்பால் அதிக வருமானம் ஈட்டுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் வாழ்வாதாரம் உயரும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் கூடும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். பொருளாதாரம் மேன்மையடையும். பயணங்களில் பாதுகாப்பாக இருக்கவும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு சிறு இடையூறுகள் தோன்றிமறையும். விவசாயிகளுக்கு லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் அநாவசிய வாக்குறுதிகளைக் கொடுத்து திணறுவீர்கள். கலைத் துறையினர் சாதுர்யத்துடன் வெற்றி பெறுவீர்கள்.
பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கனவுகள் பலிதமாகும்.
சந்திராஷ்டமம் -இல்லை.
மனதில் விரக்தி மறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். புதிய சொத்துகளை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் } வாங்கல் சாதகமாக முடியும். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் போதிய அக்கறையைக் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாகவே இருக்கும். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். உடல் நலனில் அக்கறையைக் காட்டுவீர்கள். உயர்ந்தோரைச் சந்திப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் திறம்பட பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறப்பீர்கள். விவாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் நல உதவிகளைச் செய்வீர்கள். கலைத் துறையினருக்கு பண வரவு ஓரளவு நன்றாகவே இருக்கும். பெண்கள் உறவினர்களிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
செயல்களில் சுறுசுறுப்பு கூடும். வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயலாற்றுவீர்கள். விவசாயிகள் கூட்டு முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
அரசியல்வாதிகளுக்கு விடாமுயற்சிகளால் நல்ல பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்கள் கணவரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்களுக்கு சக மாணவர்களால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சொத்துகள் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கூடும். மருத்துவச் செலவு உண்டாகும்.
பெரியவர்கள் உதவுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள்.
வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விவசாயிகள் செயல்முறைகளை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகள் சமூகப் பணியில் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினரின் திறமைகள் பாராட்டப்படும்.
பெண்களுக்கு குடும்பத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு வெளிநாட்டு படிப்பில் சேர்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ஊக்கத்துடன் செயல்படுத்துவீர்கள். தொல்லை அளித்தவர்கள் விலகி விடுவார்கள். பிறருடன் இணக்கமாகவே பழகுவீர்கள். கடன்களை அடைப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும் பணியிட மாற்றமும் உண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் வீண் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கலைத் துறையினருக்கு வெற்றி உண்டு. பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள். நண்பர்களுடன் சமரசமாகப் பழகுவீர்கள். வாகனங்களைப் பழுதுபார்க்க நேரிடும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வியாபாரிகள் கடன் தர வேண்டாம். விவசாயிகள் லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் முயற்சிகளைக் கவனமாகக் கையாளவும். கலைத் துறையினர் திறமைகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் சிக்கனமாக இருந்து சேமிப்பைக் கூட்டுவீர்கள். மாணவர்கள் பாடங்களை அக்கறையுடன் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 6.
செயல்களில் சுறுசுறுப்பு கூடும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் உண்டு. வியாபாரிகள் கடன் வாங்கி முதலீடு செய்யலாம். விவசாயிகள் பயிர்களைக் கவனமாகப் பாதுகாக்கவும்.
அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 7,8.