வார பலன்கள்: 12 ராசிக்கும்!

DIN

குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உடல் ஆரோக்கியம் சீரடையும்.

உத்தியோகஸ்தர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரிகள் வருவாயைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் இருமடங்காகும்.

அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத் துறையினர் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்.

மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் கடுமையான முயற்சிகளால் வெற்றியைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

வருமானம் உயரும். கடன்களைத் திரும்ப அடைப்பீர்கள். அலைச்சல்கள் குறையும். தீயவர்களின் தொடர்பைத் துண்டிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரிகள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு அரசு வகையில் மானியங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும்.

மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 13.

ஆன்மிகச் சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கடனுக்கு முன்நிற்க வேண்டாம். தொழிலில் புதிய நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வில் பிரச்னைகள் இருக்காது. வியாபாரிகள் புதிய கிளைகளைத் திறக்க முயற்சிப்பீர்கள். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்கு உற்சாகம் பெருகும். பெண்களுக்கு பணவரவு இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் உற்சாக மனநிலையுடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 14, 15.

உடல் ஆரோக்கியம் பலப்படும். புதிய உத்வேகம் ஏற்படும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில காரியங்களில் தடை ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். கலைத் துறையினர் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு கணவருடனான அன்னியோன்யம் அதிகரிக்கும்.

மாணவர்கள் எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 16, 17.

மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவீர்கள். யோகா கற்பீர்கள். புதிய இலக்குகளை எட்டுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரிகளின் செயல்திறன் மேம்படும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் எதையும் ஆராய்ந்து செயல்படுவீர்கள். பெண்கள் குழந்தைகளால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.

மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 18, 19.

பெற்றோர் வழியில் சில நன்மைகள் உண்டாகும். மனக் குழப்பங்கள் அகலும். பொறாமைகளைச் சமாளிப்பீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளில் லாபம் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிறருடன் நல்ல புரிதல் உண்டாகும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சற்று குறையும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் வருவாய் கூடும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தோற்றத்தில் பொலிவு கூடும். சுபச் செலவுகள் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பெற்றோருக்கு உதவுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சிரமங்கள் உண்டாகும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கூடும்.

அரசியல்வாதிகள் நன்மைகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு சக கலைஞர்களின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவர்கள் கல்வியில் அக்கறையைச் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பப் பிரச்னைகள் சற்று குறையும். மன நிம்மதி ஏற்படும். புனித யாத்திரையை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு பெற வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு சில தடைகளுக்குப் பின்னர் லாபம் கூடும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத வகையில் உதவிகள் தேடி வரும். கலைத் துறையினர் கலைப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சொத்து விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசு உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபரிகளுக்குத் தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். விவசாயிகளுக்குத் தகுந்த வேலையாள்கள் கிடைத்து விளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் பேச்சில் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்குச் சுபிட்சம் உண்டாகும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மாணவர்களின் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் உயர்ந்தோரைச் சந்தித்துப் பெருமை அடைவீர்கள். மனதுக்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பணிப் பளுவைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு மந்த நிலை சற்று விலகும்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். கலைத் துறையினர் எதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்களுக்குச் சொத்து விஷயங்கள் நிறைவேறும்.

மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் அமைதி கூடும். புதிய செயல்களைச் செயல்படுத்துவீர்கள். உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். குழந்தைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் நவீன முறைகளைக் கையாள்வீர்கள். விவசாயிகள் யோசித்து நிதானமாகச் செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றமான சூழலைக் காண்பீர்கள். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கான சூழல் உருவாகும். பெண்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் பிறருக்கு உதவுவீர்கள்.

சந்திராஷ்மம் - இல்லை.

குடும்பத்தினரிடையேயான மனக் கசப்புகள் நீங்கும். விலகிய உறவினர்கள் குடும்பத்தோடு இணைவார்கள். கடன்கள் வசூலாகும். இல்லத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் பொறுப்புகளை ஏற்பீர்கள். கலைத் துறையினர் கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்துவீர்கள். பெண்கள் சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.

மாணவர்களுக்கு வெற்றி உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..