நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இவர்களின் திருமணம் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நடைபெற்றுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலில் இருப்பதாக முன்னர் செய்திகள் பரவியது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் தலைகாட்டத் தொடங்கினர்.
பின்னர், இருவரும் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் விதமாக கடந்த மார்ச் 28 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
சித்தார்த் - அதிதி தம்பதிக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.