வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

தொழிலில் ஏற்றம் உண்டாகும். பொருளாதாரம் சிறக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையில் வளர்ச்சி உண்டாகும். விவசாயிகள் மாற்றுப்பயிர்களைப் பயிரிடுவீர்கள்.அரசியல்வாதிகளின் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் உண்டு.சந்திராஷ்டமம் - இல்லை.

உற்சாக மனநிலையுடன் வலம் வருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் உங்களைத் தேடி வரும். தொழிலுக்காகப் பயணங்கள் செய்ய நேரிடும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.உத்தியோகஸ்தர்கள் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்தில் முன்னேற்றம் ஏற்படும்.அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் உண்டாகும். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் குடும்பத்தில் பிரிந்து சென்றவர்களைச் சந்திப்பீர்கள்.மாணவர்களுக்கு மனக் குழப்பங்கள் நீங்கும்.சந்திராஷ்டமம் - இல்லை.

உடல் உபாதைகள் நீங்கும். குடும்பத்தில் மனக் கசப்புகள் நீங்கும். சேவையில் ஈடுபாடு உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும்.உத்தியோகஸ்தர்களின் பேச்சை கேட்டு பிறர் நடப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கூடும்.அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் பிறருடன் இணக்கமாக இருப்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள்.மாணவர்கள் ஆன்மிகத்திலும் தர்மக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புகளில் சேர்வீர்கள். புதிய சொத்துகளை வாங்குவீர்கள். பெயரும் அந்தஸ்தும் உயரும்.உத்தியோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் விளைச்சலில் முழு கவனத்தைச் செலுத்துவீர்கள்.அரசியல்வாதிகளின் எண்ணங்கள் ஈடேறும். கலைத் துறையினர் புதிய கலைகளைக் கற்பீர்கள். பெண்கள் கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.மாணவர்கள் வருங்காலத்துக்கான சிறப்பாக அடித்தளத்தை மேற்கொள்வீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தினரின் ஆதரவும் நட்பும் கூடும். தொழிலில் புதிய சாதனைகளைச் செய்வீர்கள். இனிமையாகப் பேசிய பிறரை கவர்வீர்கள். கடன்கள் வசூலாகும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் யோசித்து செயல்படுவீர்கள்.அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் பிறருக்கு நுட்பங்களைப் பயிற்றுவிப்பீர்கள். பெண்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள்.மாணவர்கள் ஆசிரியர் சொல் கேட்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். உறவினர்களுக்கு உதவுவீர்கள். பூர்விக சொத்துகள் கிடைக்கும். அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.உத்தியோகஸ்தர்கள் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடி வரும்.அரசியல்வாதிகள் மக்கள் நலத் தொண்டுகளில் அக்கறை காட்டுவீர்கள். கலைத் துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள்.மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

சிந்தித்துச் செயல்படுவீர்கள். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். எதிர்ப்புகள் இருக்காது. பொருளாதாரம் சிறக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு அந்தஸ்து உயரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கலைத் துறையினர் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். பெண்கள் குடும்பத்தைச் சிறப்பாக நிர்வகிப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் தனி முத்திரையைப் பதிப்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

பொருளாதாரம் மேம்படும். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் கருப்பு நிறப் பயிர்களில் லாபம் அடைவீர்கள்.அரசியல்வாதிகள் கொள்கைகளில் பிடிப்பாக இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.பெண்கள் புனித திருத்தலங்களுக்குச் செல்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் சுமுகமாகப் பழகுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். மருத்துவச் செலவுகள் கூடும். முக்கிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செயல்களில் பழைய அனுபவம் கைகூடும்.உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.அரசியல்வாதிகள் மனம் திறந்துப் பேச வேண்டாம். கலைத் துறையினர் துறையில் தேக்கநிலையை மாறக் காண்பீர்கள். பெண்கள் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் புதிய படிப்புகளில் சேர்வீர்கள்.சந்திராஷ்டமம் - செப்டம்பர் 27, 28.

தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நேர்வழியில் சிந்திப்பீர்கள். ஆன்மிகத்திலும், தர்மக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். வியாபாரிகளின் எண்ணங்கள் ஈடேறும். விவசாயிகள் இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். மாணவர்களின் முயற்சிகள் ஈடேறும்.சந்திராஷ்டமம் - இல்லை.

சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவருவீர்கள். யோகா கற்பீர்கள். தர்மக் காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.உத்தியோகஸ்தர்கள் பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் நல்லபடியாக அமையும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் பணவரவைப் பெறுவதில் தாமதத்தைக் காண்பீர்கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். ரகசியங்களைப் பகிர வேண்டாம். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சீராகும்.உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கு சார்ந்த பணிகளில் தாமதமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரிகள் நிதானத்துடன் செயல்படவும். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு சில உதவிகள் சாதகமாக அமையும். கலைத் துறையினரின் சிந்தனைகள் மேம்படும். பெண்கள் விரும்பிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...