மேஷம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அஸ்வினி: பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறி மாறும். தொழிலில் இருந்த மந்த கதி போகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த சிக்கல் நீங்கும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும்.பரணி: குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். கார்த்திகை: தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.
ரிஷபம்சுபச்செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். கார்த்திகை: விரோதங்களையும் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டி வரலாம். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள். ரோகினி: நற்பலன்கள் நிகழ வாய்ப்புண்டு. எதிர்ப்படும் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட்டு சாமர்த்தியமாய் நஷ்டங்களையும் இழப்புகளையும் தவிர்த்திடுவீர்கள். மகன் மகளால் பெருமையும் கீர்த்தியும் ஏற்படும். மனம் நிம்மதியடையும்.மிருகசீரிஷம்: வருமானம் பெருகினும் செலவுகளும் கூடும். மன இறுக்கம் நீங்கி புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் நோயால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தவர்கள் குணமடந்து வீடு திரும்புவர். பரிகாரம்: லட்சுமியை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.
மிதுனம்இந்த மாதம் நல்ல பலன்களைப் பெற இயலும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். மிருகசீரிஷம்: பகைவர்களின் தொல்லை குறையும். நீதிமன்றத்தில் இதுவரை அலைக்கழித்த வழக்குகள் முடிவடையும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். திருவாதிரை: சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். பயணங்களின்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்து போக நேரும். புனர்பூசம்: கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசால் தொல்லைகள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால், பிரச்னைகளை சந்திப்பார்கள். பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
கடகம்எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசு மூலம் லாபம் ஏற்படும். புனர்பூசம்: யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.பூசம்: கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும். பணப் பற்றாக்குறையால், குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். ஆயில்யம்:இந்த மாதம் உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.
சிம்மம்பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசியில் குரு இப்பதன் மூலம் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.மகம்: விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நீண்ட நாள்களாக இருந்துவந்த பிரச்னைகள் மறையும். நீங்கள் எதைப் செய்தாலும் அதில் முழுகவனத்துடன் செய்யுங்கள்.பூரம்: வெற்றிகள் கிட்டும். குடும்பத்தில் பிரச்னைகள் வரலாம். ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உத்திரம் - 1: உங்கள் பொரு்ள்கள் திருடு போகலாம். கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும், விருதுகளும் கிடைக்கும்பரிகாரம்: சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்னைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
கன்னிநல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். உத்திரம்: தொழில் தொடங்குவதற்கு சரியான ஆலோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையின் பெயரையும் சேர்த்தே புதிய தொழில் தொடங்க வேண்டும். வாகனம் சேர்க்கை சேரும். ஹஸ்தம்: அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். வேறு பல உபதொழில்களும் இந்த நேரத்தில் ஆரம்பிக்கலாம். சித்திரை: கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்னை களும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.
துலாம்உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். செவ்வாய் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சித்திரை: மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து போகும். அந்த நேரத்தில் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்துவது நன்மையைத் தரும். ஸ்வாதி: மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். விசாகம்: உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்க பழகிக் கொள்ளுங்கள். பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.
விருச்சிகம்நன்மைகள் கிடைக்கும். காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். விசாகம்: குடும்பத்தில் நீண்ட நாள்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். அனுஷம்: பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும்போது கவனம் தேவை. பொருள்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். கேட்டை: நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் தேவை. பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
தனுசுஇந்த மாதம் பலவகைகளிலும் மாற்றங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மூலம்: மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடைவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். பூராடம்: உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும்.உத்திராடம்: சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மகரம்காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது.உத்திராடம்: எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும்.திருவோணம்: சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருள்கள் திரும்பவும் கிடைக்கும். அவிட்டம்: உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பரிகாரம்: சனி பகவானை வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.
கும்பம் உங்களூக்கு இந்த மாதம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். அவிட்டம்: உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள்.சதயம்: உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்னைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு பொருள்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும்.பூரட்டாதி: படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் சொந்தங்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.
மீனம்உங்களூக்கு இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். பூரட்டாதி: வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். இருந்தபோதும் அவ்வப்போது சிற்சில வேளைகளில் கையைப் பிசைந்து கொண்டு இருப்பீர்கள்.உத்திரட்டாதி: இந்த மாதம் நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எபோதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள்.ரேவதி: புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்னைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.