குழப்பம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காரியங்களை சாதிப்பீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5

இன்று நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்னையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

இன்று கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5

இன்று முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் சரிவரச்செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் ஆதரவுகளை இழப்பார்கள். அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், கருநீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

இன்று திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களே நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். துர்க்கை யம்மனை வழிபாடு செய்வது நல்லது.அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6

இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதாஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5

இன்று கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் காப்பாற்றி அனைவரின் ஆதரவுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்த்த லாபத்தைப்பெற நிறைய போட்டிகளை சமாளிக்க நேரிடும்.அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

இன்று கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றால் வீண் செலவுகள் உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

இன்று உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப்பெற தாமதநிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் அதிகநேரம் உழைக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

இன்று எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும்.அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

இன்று உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சில இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத மேன்மைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...