இந்த விதிமுறைகள் தெரியாமல் ரயிலில் பயணிக்க வேண்டாம்!

இணையதளச் செய்திப் பிரிவு

ரயில் பயணிகளின் இரவு நேர பயணத்தை இனிமையானதாக மாற்ற ரயில்வே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ENS

இரவு 10 மணிக்கு, ரயில் பெட்டிகளின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும் மெல்லிய வெளிச்சம் கொடுக்கும் ஒரு சில விளக்குகள் மட்டுமே எரியும்.

ENS

கும்பலாகச் சென்றிருந்தாலும் 10 மணிக்கு மேல் சப்தமாக பேசக் கூடாது. போனில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டிருப்பதோ, சப்தமாக பாட்டுக் கேட்பதோ தவறு.

ENS

இரவு 10 மணிக்கு மேல், முன்பதிவு செய்யாத பயணிகள், முன்பதிவு பெட்டிகளுக்குள் நுழையக் கூடாது.

ENS

படுக்கை வசதி கொண்ட ரயில்களில் நடு படுக்கை வசதியை இரவு 10 மணிக்கு ஒருவர் பயன்படுத்தத் தொடங்கலாம். காலை 6 மணிக்கு அதனை மடக்கி வைக்க வேண்டும்.

ENS

இரவு 11 மணி வரை மட்டுமே போன் சார்ஜ் செய்யும் வசதி கிடைக்கும்.

ENS

இரவு நேரப் பயணங்களின்போது, உடன் பயணிக்கும் பயணிகள் உறக்கம் கலையும் வகையில் சப்தம் உருவாக்காமல், அமைதியாக இருப்பதே பயணிகளுக்கு நல்லது. மீறினால் குற்றமாகக் கருதப்படும்.

ENS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்