இணையதளச் செய்திப் பிரிவு
உங்கள் உடலில் அதிகமாக சேரும் கொழுப்பு, உடலில் அப்படியே தங்கிவிடுவதால்தான் உடல் பருமன் மற்றும் அதன் தொடர்ச்சியாக பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சிலருக்கு உடல் எடை குறைவாக இருந்தாலும் உடலில் கொழுப்பு அதிகம் இருக்கும். இத்தனையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க 5 விதிகள்!
1. இரவு உணவு
இரவு நேரத்தில் மிகவும் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டவுடன் சில மணி நேரங்கள் கழித்தே தூங்கச் செல்ல வேண்டும்.
2. உடற்பயிற்சி
தினமும் எளிதான உடற்பயிற்சியாவது அவசியம். போனில் பேசும்போது நடப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்றவற்றைச் செய்யலாம்.
3. தூக்கம் அவசியம்
நீங்கள் சரியான உணவு சாப்பிட்டு தேவையான அளவு உடற்பயிற்சி செய்தாலும் தூக்கம் இல்லை என்றால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவோரின் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். அதனால் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்குவதை உறுதி செய்யுங்கள்.
4. வலிமைக்கான பயிற்சி
உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி உடல் வலிமை பெற 'டம்பிள்ஸ்' போன்ற சாதனங்களின் உதவியுடன் ஸ்குவாட், லஞ்சஸ், முடிந்தால் ஹிட்(HIIT) போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
5. உணவுகள்
கார்போஹைடிரேட் உணவுகளைக் குறைத்து கரையக்கூடிய நார்ச்சத்து, இரும்புச் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் எண்ணெய், கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். அதுவும் குறைவாகவே பயன்படுத்துங்கள்.
சர்க்கரையை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள், டீ, காபியை குறைத்துக்கொள்ளுங்கள், உணவில் உப்பையும் குறைத்துக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.