இணையதளச் செய்திப் பிரிவு
சமீபமாக பெண்கள் அழகுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
சிலருக்கு முகத்தில், கை, கால்களில் தேவையற்ற முடிகள் வளர்ந்திருக்கும். இது பெரும்பாலானோருக்கு அழகைக் கெடுக்கும் விதத்தில் இருக்கும்.
இது பெண்களுக்கு ஒரு சில ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வழக்கத்திற்கு அதிகமான முடி வளர்ச்சி இருந்தால் கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
மாறாக சாதாரணமாக முகத்தில் குறிப்பாக உதட்டின் மேல் பகுதியில், தாடையின் கீழ் பகுதியில் நெற்றியில்கூட சிலருக்கு உரோமங்கள் இருக்கும். அதேபோல கை, கால்களிலும் அதிகமாக முடி வளர்ந்திருக்கும்.
பலரும் இதற்கு செயற்கை ரசாயனங்கள் நிறைந்த பல க்ரீம்களைப் பயன்படுத்தி சருமத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர்.
இதற்கு ஒரு இயற்கையான தீர்வு இருக்கிறது.
கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், அரிசி மாவு தலா ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் தேவையான அளவு பால் சேர்த்து கலந்து முகத்தில் முடி உள்ள இடங்களில் தடவி ஒரு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.
சிலருக்கு ஒவ்வாமை இருந்தால் பாலுக்கு பதிலாக தயிர் சேர்க்கலாம். வாரத்திற்கு குறைந்தது 3 நாள்கள் இவ்வாறு செய்யலாம். தொடர்ந்து செய்துவர படிப்படியாக முடி உதிரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.