இளைஞர்கள் அதிகம் செலவிடுவது எதற்காக?

இணையதளச் செய்திப் பிரிவு

பலரும் அதிகமாக துணி எடுக்கவும் செல்போன் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தவும் அதிகம் செலவிடுவதாக நினைத்திருக்கலாம்

உண்மையில் யுபிஐ பணப்பரிவர்த்தனையின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில் கிடைத்திருக்கும் தகவல் வேறுமாதிரியாக உள்ளது.

நகரம் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த 30 வயதுக்குள்பட்டவர்களின் பணப்பரிமாற்ற விவரங்களின்படி, இளைஞர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகவும், ஒரு மாதத்தில் இது கிட்டத்தட்ட 200 பணப்பரிவர்த்தனை என்ற அளவை தொடுவதாகவும் கூறப்படுகிறது.

இளம் தலைமுறையினரிடையே நள்ளிரவு முதல் காலை 6 மணி வரையிலான பணப்பரிவர்த்தனைகள் அதிகமாக உள்ளன. அதுவும் பெரும்பாலும் உணவுக்கான ஆர்டர்களுக்கு செலவிடுவதுதான்.

Center-Center-Delhi

காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மளிகைப் பொருள்கள் வாங்க செலவிடப்படுகிறது.

இதன்படி பார்த்தால், இளம்தலைமுறை துணி மற்றும் கேட்ஜட்களை விடவும், உணவுக்காகவே அதிகம் செலவிடுகிறது என்பதை அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்