இணையதளச் செய்திப் பிரிவு
மன அழுத்தத்தால் இன்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏன், உடலில் பெரும்பாலான தொந்தரவுகளுக்கு மன அழுத்தமே காரணமாக இருக்கிறது.
அதேபோல உயர் ரத்த அழுத்தத்தாலும் பக்கவாதம், இதய கோளாறுகள், சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
இந்த உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்கும் ஒரு தாதுப் பொருள் இருக்கிறது. அதுதான் பொட்டாசியம்.
பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று கூறுகிறார்கள். அது பாதி தீர்வுதான்.
ரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால் உப்பைக் குறைப்பதுடன் பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அவோகேடோ அல்லது வெண்ணெய் பழம், கீரைகள், வாழைப்பழம் ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகமுள்ளது.
பொட்டாசியம் அதிகமுள்ள உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட், மாதுளை, தக்காளி, தர்பூசணி, இளநீர், திராட்சை, பீன்ஸ் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.