இணையதளச் செய்திப் பிரிவு
திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே வர வேண்டும், வேறு எந்த காரணத்துக்காகவும் வரக்கூடாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதுபோல, திருப்பதிக்கு வரும்போது பக்தர்கள் செய்யக் கூடாதவை என சில விவரங்களைப் பட்டியலிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும்போது அதிகமான தங்க நகைகள் அணிந்து வர வேண்டாம்.
தங்கும் இடம் மற்றும் தரிசனத்துக்கு தரகர்களை நம்ப வேண்டாம்.
கோயிலுக்குள் எங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தை கீழே போடக் கூடாது.
திருமலைக்குள் மது அருந்துவது, அசைவம் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் நுழைந்த பிறகு தலையில் கவசம், தொப்பி போன்றவற்றை அணியக் கூடாது.
வன்முறை மற்றும் சண்டையில் ஈடுபடக் கூடாது. வரிசையில் அமைதியாக செல்ல வேண்டும். முண்டியடித்து ஓடக்கூடாது. கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட ஆடைகளுடன் வந்தால் அனுமதி கிடையாது.
திருமலையில் மலர்ந்த மலர்களை பறித்து தலையில் சூட வேண்டாம். ஏனென்றால் திருமலையில் மலரும் அனைத்துப் பூக்களும் இறைவனுக்கே.
பிச்சையிட வேண்டாம். கோயில் வளாகத்தில் எச்சில் துப்புவது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட எந்தவொரு பொருள்களையும் கோயிலுக்குள் கொண்டு வரக் கூடாது என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.