இணையதளச் செய்திப் பிரிவு
ஆனால், இந்த மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதம் இசைப்பதில்லை.
அதற்கு மாறாக, ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் ஒவ்வொரு பாடலாக நாள்தோறும் காலை இசைக்கப்படுகிறது.
மார்கழியில், ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களைக் கேட்டுத்தான் ஏழுமலையான் துயில் எழுவதாக ஐதீகம்.
அது மட்டுமல்ல, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மார்கழி மாதத்துக்கு என தனி வழிபாட்டு அட்டவணைகள் உள்ளன.
இறைவனுக்குப் படைக்கப்படும் பிரசாதம் முதல் ஒவ்வொரு கால பூஜைகளிலும் மார்கழி மாதத்தின் சிறப்புகள் வந்து சேர்ந்துகொள்வது சிறப்பு.
கோயிலில் நடைபெறும் அலங்காரங்களின்போது, ஆண்டாளின் சிறப்பான கிளிகளும் இடம்பெறுமாம்.
புரட்டாசி பிரம்மோற்சவத்தின்போதும் வெங்கடேச பெருமாளுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கொண்டு செல்லப்பட்டு அணிவித்து அழகுபார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.