இணையதளச் செய்திப் பிரிவு
பெண் தோழிகளுடன், இலங்கை சென்றிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, அங்கு கேளிக்கை, கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஆனால், அதனைப் பார்த்த ரசிகர்களோ, புயலைக் கிளப்பியிருக்கிறார்கள்.
திருமணத்துக்கு முன்பு, இளைஞர்கள், நண்பர்களுக்கு அளிக்கும் பாச்சுலர் பார்ட்டிதான் இது என்றும், ராஷ்மிகா மந்தனா விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் ஊகங்களை அள்ளி வீசி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
நடிகை ராஷ்மிகா மந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெண் தோழிகளுடன் இலங்கை சென்று அங்கு விடுமுறைக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியோடு இருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகியிருக்கிறது.
ஆனால், இதனைப் பார்த்த அவரது ரசிகர்களோ, இது வெறும் சுற்றுலா இல்லை
வரும் பிப்ரவரியில் அவர் தன்னுடைய காதலர் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்யவிருக்கிறார்.
அதனால்தான், பெண் தோழிகளுக்கு பாச்சுலர் பார்ட்டி கொடுக்க இலங்கை சென்றிருக்கிறார் என ஊகித்து கமெண்டுகள் அள்ளி வீசி வருகிறார்கள்.
ரசிகர்களின் ஊகங்களுக்கு ராஷ்மிகாதான் பதில் சொல்ல வேண்டும்.
செவ்வாய்க்கிழமை மாலை, ராஷ்மிகா தன்னுடைய இன்ஸ்டாவில் தான் மற்றும் தன்னுடைய பெண் தோழிகளை எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்தார்.
எனக்கு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைத்தது. உடனே என் தோழிகளோடு இலங்கை சென்றுவிட்டேன் என்று பதிவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.