இணையதளச் செய்திப் பிரிவு
ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி வருவது இந்த நவீன காலத்தில் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம்..
ஒரு ஊருக்கே ஒரே ஒரு லேண்ட் லைன் எண் மட்டும்தான் தொலைத்தொடர்பு எண்ணாக இருந்த நிலையில் செல்போன்கள் வந்து, தற்போது ஒரு நபருக்கு மூன்று செல்போன் எண்கள் என்ற அளவுக்கு தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துவர்கள் பற்றிய ஒரு சிறிய ஆய்வுத் தகவல் வெளியானது.
கடந்த ஏழு முதல் பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்தி வருபவர்கள், நேர்மையாளர்கள், கடந்த காலங்களில் எந்த சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வாங்கியிருந்தால் அதனை சரியாக திருப்பிச் செலுத்தி இருப்பார்கள், யாருடனும் பகை பாராட்டி பெரிய சண்டையாகி, அவர்களுக்காக செல்போன் எண்ணை மாற்றவில்லை.
உங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், இந்த எண்ணைத்தானே வைத்திருப்பார்கள் என்ற உணர்வினால், செல்போன் எண்ணை மாற்ற விரும்பாதவர்களாக இருப்பீர்கள். அதனால் அன்புக்கு மரியாதை செலுத்துபவராக இருப்பீர்கள்.
இதுவரை உங்கள் மீது எந்த வழக்கும், புரட்டும் இல்லை. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் அர்த்தமாம்.
இதனால்தான், இந்த நவீன காலத்தில் ஒரு செல்போன் எண்ணை பல ஆண்டுகள் மாற்றாமல் வைத்திருப்பதே மிகப்பெரிய கௌரவம் என்று கூறப்படுகிறது.
எனவே, இந்தப் பட்டியலில் நீங்கள் இருந்தால் பெருமிதத்தோடு சட்டைக் காலரை உயர்த்திக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.