இணையதளச் செய்திப் பிரிவு
பௌர்ணமி அன்று ஒளி தன்மை மிக்க கிரகங்களான சூரியனும் சந்திரனும் சம சப்தம பார்வை பார்க்கும் பொழுது ஒளிரும் தன்மை அதிகம் வெளிப்படும்.
இக்கால கட்டத்தில் கடவுளின் மந்திரத்தை உச்சரித்து, அமைதியான முறையில் தெய்வீக மலையைச் சுற்றுப்பொழுது நம் உடலில் உள்ள இருள் என்ற அசுப தன்மை அகற்றி நேர்மறை ஆற்றல் வெளிப்படும்.
நெருப்பு மலையில் சிவனுக்கு ஜோதி வழிபாடு மிகவும் சிறந்தது.
ஒளியின் தொடர்பு கொண்ட பௌர்ணமி, சித்திரை, கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு விசேஷமாகும்.
இந்த மலையில் சேஷாத்ரி சுவாமி, ரமணரும், விசிறி ஸ்வாமிகள், பல்வேறு சித்தர்கள் வாசம் செய்கிறார்கள்.
சிவனை நோக்கி பல்வேறு தெய்வீக ஆற்றல்மிக்க முனிவர்கள், ஞானிகள் நம் கண்ணுக்குப் புலப்படாமல் நடந்து செல்லுவதாகக் கூறப்படுக்கிறது.
இந்த மலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், தற்போது கலியுகத்தில் கல் மலையாக மாறி காட்சியளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.