பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

இணையதளச் செய்திப் பிரிவு

எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் மிக உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான்' விருது வழங்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா பிரதமர் அபி அகமத் அலி, இந்த விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

எத்தியோப்பியா பிரதமர் அபி அகமத் அலியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

உலகத் தலைவர்களிலேயே முதன்முறையாக இந்த விருதைப் பெற்றவர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றார்.

பின்னர் பிரதமர் மோடி, அடிஸ் அபாபா பகுதியில் உள்ள அத்வா அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்டார்.

அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு அதுபற்றி கேட்டறிந்தார்.

எத்தியோப்பியா அத்வா அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடி..

எத்தியோப்பியாவின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி, அனைத்து இந்தியர்களின் சார்பாக இந்த கௌரவத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும் 140 கோடி இந்தியர்களுக்கும் எத்தியோப்பிய மக்களும் இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...