இணையதளச் செய்திப் பிரிவு
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய் இன்று(டிச.18) ஈரோடு மூங்கில்பாளையம் மைதானத்தில் மீண்டும் பொதுக்கூட்ட பிரசாரத்தைத் தொடங்கினார்.
கூட்டத்தில் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
விஜய்யின் பெயரைக் கெடுக்க சூழ்ச்சி செய்கிறார்கள் என்றும் மக்களை என்னிடம் இருந்து பிரிக்க நினைக்கிறார்கள் என்றும் பேசினார்.
"அத்திக்கடவு திட்டத்தை விரிவுப்படுத்தினால் 3 மாவட்ட மக்களுக்கு உபயோகமாக இருக்கும். ஆனால், அதையெல்லாம் செய்ய மாட்டார்கள்"
வள்ளுவர் கோட்டத்துக்கு காட்டும் அக்கறையை மக்களுக்கு ஏன் காட்ட மறுக்கிறீர்கள். ஆட்சி நடத்துகிறீர்களா? கண்காட்சி நடத்துகிறீர்களா? என்றார்.
எங்களின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பது தவெக தொண்டர்களுக்கு தெரியும். அந்த புரிதல் அவர்களுக்கு இருக்கின்றது.
எங்களின் எதிரி யாரென்று தெளிவாகக் கூறிவிட்டுதான் அரசியலுக்கு வந்துள்ளோம் என்று பேசினார்.
இறுதியாக அங்கு கூடியிருந்த தொண்டர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.