இணையதளச் செய்திப் பிரிவு
மக்களவையில் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா (விபி - ஜி ராம் ஜி) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக இது கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தபோது...
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர்.
திமுக எம்.பி.க்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.