தீக்கிரையாகும் வங்கதேசம்!

வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமை மாலைமுதல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்ட ஹாடி, சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று மரணமடைந்தார்.

போராட்டக்காரர்கள் தீ வைத்த வங்கதேசத்தின் முன்னணி பத்திரிகை நிறுவனத்தின் கட்டடம்.

ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்தாண்டு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் இயக்கத்தின் தலைவர் ஹாடி.

நாட்டின் மிகப்பெரிய நாளிதழ்களான புரோதோம் அலோ மற்றும் டெய்லி ஸ்டார் ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.

சட்டோகிராம் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரகம், தூதரின் வீடுகளைக் குறிவைத்து போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல்.

இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...