இணையதளச் செய்திப் பிரிவு
சிபில் ஸ்கோர் என்பது, ஒருவர் பெறும் கடனை தவணை தவறாமல் சரியான நேரத்தில் செலுத்தி முடிப்பதை அடிப்படையாக வைத்து அமைகிறது.
அந்த வகையில், சிபில் ஸ்கோரை பல விஷயங்கள் பாதிக்கும். சிலது சிபில் ஸ்கோரை குறைக்கச் செய்யும்.
நிறைய கடன் இருப்பது சிபில் ஸ்கோரை பாதிக்காது. அதிக கடன் அட்டைகள் வைத்திருந்தாலும் பிரச்னை இல்லை.
மிகப் பழைய கிரெடிட் கார்டு, அதில் தவறாத தவணைகள்தான் சிபில் ஸ்கோரை உயர்த்தும்.
ஒருவேளை, கிரெடிட் கார்டு கடனை எல்லாம் அடைத்துவிட்டு கிரெடிட் கார்டை திரும்ப வழங்கினால் அப்போது சிபில் ஸ்கோர் அதிகரிக்காது மாறாக குறையலாம்.
எனவே, ஒருவர் பயன்படுத்தும் பழைய கிரெடி கார்டுகளை பயன்பாட்டில் வைத்து, அதில் கடன் தவணைகளை முறையாக செலுத்துவதே நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.