நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் அளிக்கும் படிவம் 6 விண்ணப்பத்தையே பூர்த்தி செய்து தர வேண்டும்.

கோப்பிலிருந்து

அதில், வயது மற்றும் இருப்பிட முகவரிக்காக தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பித்து சுய உறுதிமொழி அளிக்க வேண்டும்.

முந்தைய தேர்தலில் வாக்களித்தவர்கள் வாக்களித்த இடத்தைக் குறிப்பிட்டு ஆதார் எண்ணையும் ஆதாரமாக அளிக்கலாம்.

பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை அளித்து பெயரைச் சேர்க்கலாம்.

முகவரியை மாற்றவும், பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்தவும் படிவம் 8-ஐ அளிக்க வேண்டும்

வாக்காளர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

முகாமுக்கு செல்ல இயலாதோர் https://www.eci.gov.in/voters-services-portal என்ற இணையதளம் மற்றும் Voter Helpline App செயலியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் நடவடிக்கையில் 97 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...