அழகின் ரகசியம் என்ன? - தமன்னா பதில்!

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவுள்ள தமன்னா, தனது அழகின் ரகசியம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

தனக்கும் முகப்பருக்கள் அதிகமாக வரும் என்றும் அதனை சரிசெய்ய தன்னுடைய வாயின் உமிழ்நீரைப் பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

காலையில் வெறும் வாயில் உள்ள எச்சிலை பயன்படுத்த வேண்டும். அறிவியல்ரீதியாக காலையில் நம் வாயில் உள்ள எச்சிலில் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள்கள் அதிகம் இருக்கும்.

எனவே, வாயில் உள்ள உமிழ்நீர் பருக்களுக்கு எதிராக வேலை செய்யும். எனக்கு இது நன்றாகவே வேலை செய்கிறது என்று பதிலளித்துள்ளார்.

மேலும் தன்னுடைய அழகுக்கு டயட் முக்கிய காரணம் என்று கூறும் தமன்னா, சருமத்தைப் பாதிக்கும் எந்த உணவையும் எடுத்துக்கொள்வதில்லை என்கிறார்.

சரும அழகு என்பது க்ரீம்களால் அல்ல, உங்கள் உடலுக்கு என்ன தேவை, எப்படிச் செயல்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வதில்தான் சருமம் அழகு பெறுகிறது என்றும் கூறியுள்ளார்.

தமன்னா | Instagram / tamannaah

உங்கள் உடலின் பிரதிபலிப்புதான் சருமம். உங்கள் உடல் சுத்தமாக இருந்தால் குடல் ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் முகமும் சருமமும் அழகாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...