50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் பரவலாக 10 ரூபாய் நாணயத்தை ஏற்க பல தரப்பிலும் மறுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து மறைந்துவிட்ட 50 காசு இன்னும் சட்டப்படி செல்லுபடியாகும் என ஆர்பிஐ விளக்கம் கொடுத்துள்ளது.

Center-Center-Chennai

ரிசர்வ் வங்கி, இன்னமும் அதிகாரப்பூர்வமாக 50 காசு நாணயங்களை புழக்கத்திலிருந்து நீக்கவில்லை. அதன்படி பார்த்தால், கடைகளுக்குச் சென்று 50 காசு சாக்லேட் ஒன்றை, குழந்தைகள் 50 காசு நாணயம் கொடுத்து வாங்க முடியும். ஆனால் அது செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பத்தில் வியாபாரிகள் 50 காசு நாணயத்தை வாங்குவதில்லை.

Center-Center-Villupuram
Center-Center-Hyderabad

தற்போது 50 காசு மதிப்புள்ள பொருள்களை மக்கள் ஒரு ரூபாய் கொடுத்து இரண்டாக வாங்கும் நிலைதான் உள்ளது.

Center-Center-Bangalore

வெவ்வேறு வடிவமைப்புகளில் இருக்கும் நாணயங்கள் ஒரே சமயத்தில் புழக்கத்தில் இருக்கின்றன. அதன்படி, 50 காசு, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, மற்றும் ரூ.20 மதிப்புள்ள நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லக்கூடியவை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

Center-Center-Delhi

மக்களுக்கு இது தொடர்பான குறுந்தகவல்களையும் விடியோவையும் வெளியிட்டு ஆர்பிஐ விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆர்பிஐ

நாணயங்கள் குறித்த தவறான தகவல்களை அல்லது வதந்திகளை நம்பாதீர்கள். தயக்கமின்றி நாணயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். என்று ரிசர்வ் வங்கி சொல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்