இணையதளச் செய்திப் பிரிவு
சுற்றுச்சூழலில் காற்று மாசு தீவிரமாகியிருப்பதால், காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் கலந்து சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதனால் நுரையீரல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திசுக்கள் பாதிக்கப்படுகின்றன.
அதன் விளைவாக, சுவாசிப்பதில் சிரமம், மூச்சு வாங்குதல், இருமல் உள்பட சுவாசக் கோளாறுகள் ஒவ்வொன்றாக ஏற்படுகிறது.
இவற்றிலிருந்து தப்பிக்க, நுரையீரல் சீராக இயங்க தேவையான சத்து நம் உடலுக்கு தேவை.
அதற்கான சிறந்த தீர்வுகளுள் ஒன்றாக வைட்டமின் சி உள்ளது.
வைட்டமின் சி சத்து நிறைந்த உணவைச் சேர்த்துக்கொண்டால் சுவாசப் பாதை பிரச்னைகளால் நுரையீரல் பெரியளவில் பாதிக்கப்படாமல் காக்கலாம்
வைட்டமி சி, காற்றில் கலந்துள்ள பிஎம்2.5 துகள்களால் ஏற்படும் நுரையீரல் வீக்கத்தை தடுக்கும் என்று புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
மருத்துவர் ஆலோசனையின்பேரில், வைட்டமின் சி சத்து மாத்திரைகளை பரிந்துரைத்த அளவில் எடுத்துக்கொள்வதும் சிறந்த தீர்வாக அமையும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.