இணையதளச் செய்திப் பிரிவு
தலைமுடி உதிர்தல்.. இன்று பொதுவாக அனைவருக்குமே இருக்கும் ஒரு பிரச்னை. தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கு முன்னதாக அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்வதுதான் முதலில் அவசியம்.
மரபியல் காரணங்கள், ஹார்மோன் மாற்றங்கள் குறிப்பாக பெண்களுக்கு பிசிஓஎஸ், கருப்பை நீர்க்கட்டிகள், நீரிழிவு, மாதவிடாய், மெனோபாஸ், தைராய்டு போன்ற பிரச்னைகள் இருந்தால் முடி உதிர்தல் இருக்கலாம்.
தலையில் அழுக்கு சேர்வதால் ஏற்படும் பொடுகினாலும் முடி உதிர்தல் இருக்கும். உடல் ரீதியான பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளினால் தலைமுடி கொட்டலாம்.
மன அழுத்தமும் முடி உதிர்தலுக்குக் காரணம். ஒட்டுமொத்தமாக உடல்ரீதியான பாதிப்புகளுக்கு மன அழுத்தம் ஒரு காரணமாக மாறி வருவது கவனிக்கத்தக்கது.
வயது முதிர்வினாலும் சிலருக்கு முடி உதிர்தல் ஏற்படலாம். ஊட்டச்சத்து குறைபாடு முடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும்.
தலைமுடியை வெப்பமடைய வைக்கும் ஹேர் டிரையர், ஸ்ட்ரைட்னர் போன்றவையும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்னையைச் சந்திக்கலாம்.
ரசாயனம் அதிகம் நிறைந்த ஷாம்பூ உள்ளிட்ட தலைமுடி சார்ந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவது முடி உதிர்தல் பிரச்னையை ஏற்படுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.